யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குடவத்தை பகுதியில் மக்கள் மீது பொய்யான வழக்குகள் பதியப்படுவதாகவும், பொலிசார் மக்கள் மீது மூர்க்க தனமாக தாக்குதல் மேற்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திர மூர்த்தியிடம் இன்றைய தினம்(27.06.2026) முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பில் நேரடியாக பாராளுமன்ற உறுப்பினர் குடவத்தை கிராமத்திற்கு சென்று மக்களுடன் உரையாடியதுடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்
