செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் உரித்து தேசிய வேலைத்திட்டம் இன்று..!

uriththu national land deed program 2026 | Pathivu News

ஹிமிகம (உரித்து) பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (27.02.2026) அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.

அனுமதிப் பத்திரங்கள் மற்றும் கொடுப்பனவுப் பத்திரங்களின் கீழ் காணிகளை அபிவிருத்தி செய்து பயன்படுத்தி வரும் விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு, அந்தக் காணிகளின் முழு உரிமையை வழங்கும் ‘உரித்து’ பூரண அளிப்புப் பத்திரம் வழங்கும் தேசியத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம், கொரகஹவெவ வடமத்திய மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

1935ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் கீழ் காணிகளை பயன்படுத்தி வரும் மக்களுக்கு, அந்தக் காணியின் மீதான முழுமையான உரிமை இல்லாத காரணத்தினால், அதனை மனிதத் தேவைகளுக்கோ அல்லது பொருளாதார அபிவிருத்திக்கோ பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது.

இதன் காரணமாக,தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களில் உள்ள நிபந்தனைகளை நீக்கி 1947ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க அரச காணிகள் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவுக்கு இணங்க, அவற்றுக்குப் பதிலாக ‘பூரண அளிப்புப் பத்திரம்’ வழங்கப்படும்.

தங்கள் விருப்பத்தின் பேரில் அனுமதிப்பத்திரங்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பவர்களுக்கு இந்த புதிய ‘ஹிமிகம’ உரித்து பூரண அளிப்புப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் 500 பயனாளிகளுக்கு இந்த அளிப்புப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் காணி ஆணையாளர் நாயகத் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp