உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கீரிமலை குப்பை மேடு – ‘இது மிகப்பெரிய அனர்த்தமாகும்’

keerimalai garbage dump is a major disaster | Pathivu News
கீரிமலை பிரதேசத்தில் கடந்த காலங்களில் கொட்டப்பட்ட கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.
கீரிமலை பிரதேசத்தில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டனர்.
இதன்போது, குறித்த பகுதி மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதை அவதானித்த ஆளுநர், ‘இது மிகப்பெரிய அனர்த்தமாகும்’ எனக் குறிப்பிட்டதுடன், இப்பகுதியில் தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
கொட்டப்பட்ட கழிவுகளை மனித வலுவை மாத்திரம் பயன்படுத்தி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் போதிய வேகத்தில் இடம்பெறவில்லை எனக் குறிப்பிட்ட ஆளுநர், இயந்திரங்களைப் பயன்படுத்தி கழிவுகளைத் துரிதமாக அகற்றுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், எதிர்காலத்தில் இப்பகுதியில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களைப் பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் அறிவுறுத்தினார்.
இதேவேளை, வலி. தெற்கு பிரதேச சபையால் குறித்த பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுப்பதாக, வலி. தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.பிரகாஸ் ஆளுநரிடம் உறுதியளித்தார்.
அத்துடன், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையிலிருந்து குறித்த பகுதியில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுவிட்டதாக அங்கு கடமையாற்றும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆளுநருக்குத் தெரியப்படுத்தினார்.
இதன்போது, மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகளை தமது சபையால் ஏற்றிச் செல்வதில்லை என வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார்.
கீரிமலை பிரதேசத்தில் காணப்படும் இந்நிலைமை தொடர்பில் தொடர்ந்து கண்காணிப்பை மேற்கொண்டு, மக்கள் சுகாதாரத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.
இக்கண்காணிப்பு பயணத்தின்போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், யாழ்ப்பாண மாவட்டப் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபைகளின் கௌரவ தவிசாளர்கள், வலி. வடக்கு பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் கௌரவ உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊