தேசவிரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26, வது ஆண்டு நினைவு
யாழ்ப்பாணம் உயர் பாதுகாப்பு வலயம் அன்று 2000,அக்டோபர்,19, வியாழக்கிழமை ஊரடங்குச்சட்டம். இரவு 09.45, மணியளவில் தனது வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்தில் அறையில் ஊடகங்களுக்காக செய்திகளை எழுதிக் கொண்டிருந்தார். நிமலராஜனின் தந்தையார் மயில்வாகனத்தின் பின் கழுத்தில் கத்தியை வைத்து ஒரு கொலையாளி எச்சரித்து கொண்டிருந்தான். அப்போது துப்பாக்கிதாரி நிமலராஜனை நோக்கி சுட்டான் தான் எழுதிய அந்த செய்தி தாள்கள் மேலே தலை சாய்த்து குருதி சிதற தனது உயிரை விட்டார்.
1961,யூன்,05, ம் திகதி யாழ்ப்பாணத்தில் தந்தை மயில்வாகனம், தாய் லில்லி திரேஸ் ஆகியோருக்கு மகனாக பிறந்த நிமலராஜன் பரிமளா என்பவரை மணம் முடித்து மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்தவர் 2000, அக்டோபர்,19, ல் 39, வயதில் படுகொலை செய்யப்பட்டார்.
தாய் லில்லி திரேஸ் 2021,லும்
தந்தை மயில்வாகனம் 2023, லும் பின்னர் கனடாவில் காலாமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போர் சூழல் நிலவிய யாழ்ப்பாணத்தில் இருந்து நிமலராஜன் பல செய்தி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்கி வந்தார். அவற்றுள் பிபிசி வானொலியின் தமிழ், சிங்கள சேவைகள், வீரகேசரி நாளேடு, ராவய நாளேடு, சூரியன் எவ் எம் வானொலி என்பன முக்கியமானவையாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து நடுநிலையான செய்திகளை வழங்கி வந்த வெகு சிலரில் இவரும் ஒருவராவார்.
கொலையாளிகள் வீட்டை விட்டு செல்லும் போது கைகுண்டு ஒன்றை வீசி விட்டு சென்றனர். வீசப்பட்ட எறிகுண்டு தாக்குதலில் நிமலராஜனின் தாய், தந்தை மற்றும் 11 வயதான மருமகன் ஆகியோர் கடும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
நிமலராஜன் படுகொலை தொடர்பாக வழக்கில் சந்தேக நபர்களாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியைச் (ஈ.பி.டி.பி.) சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன், ரமேஷ் .ஜெகன், முரளி, பாஷா உள்ளிட்ட 06,சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பி 423/2000 இலக்க வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது பின்னர் அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றனர் திரும்பி வரவில்லை.
இந்நிலையில் சுமார் 20,ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு இடம்பெறவில்ல.
விசாரணைக் கோப்பு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர், ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எந்தவித பதிலும் வரவில்லை. இறுதியாக, 2021 ஏப்ரல் சட்டமா அதிபர் திணைக்களம், சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடரப் போதுமான ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் கட்டளைக்கு இணங்க 2021,மே,05 யாழ்ப்பாணம் நீதிமன்றம் சட்டமா அதிபரின் தீர்மானத்தை வெளிப்படுத்தியது. நீதி இல்லாத படுகொலையாக 26, ஆண்டுகளாக நிமலராஜனின் படுகொலை நினைவு தொடர்கிறது.
1985 டிசம்பர் 25,ல் இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றை சேர்ந்த கணபதிப்பிள்ளை தேவராசா இவர் அக்கரைப்பற்றில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு கொண்டவெட்டுவான் இராணுவ முகாமிலில் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கையில் 1985,டிசம்பர்,25, தொடக்கம் 2009,மே,18,வரை சுமார் 44, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 37 தமிழ் ஊடகவியலாளர்களும், 05 சிங்கள ஊடகவியலாளர்களும், 02 முஸ்லீம் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் 02.ஊடகவியலாளரும், ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் 02 ஊடகவியலாளரும், சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும், மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 27ஊடகவியலாளர்களும் என மொத்தமாக 44 ஊடகவியலாளர்கள் இழந்து இருக்கின்றன்றோம்.
What’s your Reaction?

