உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை..!

jaffna tourism development under clean sri lanka | Pathivu News
“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான சுற்றுலா மையங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க என தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றக் கூட்டம் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தலைமையில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
அதில் பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு மாகாணங்களில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்துவதற்கு சிறிய அளவிலான திட்டங்கள் மாத்திரம் போதாது என்றும், பெரிய முதலீடுகள் மற்றும் நீண்டகால அபிவிருத்தித் திட்டங்கள் அவசியம்
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் 20 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ள நிலையில், யாழ்ப்பாணத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 53,000 மட்டுமே. இந்த நிலைமையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை நாம் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்
இந்த ஆண்டு 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதே இலக்காகக் கொண்டுள்ளோம், உலக சுற்றுலாத்துறை வேகமாக வளர்ச்சி பெற்று வரும் நிலையில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளும் அந்த வளர்ச்சியின் முழுமையான பயனைப் பெற வேண்டும்
உலகளவில் சுற்றுலாத்துறை மிக வேகமாக முன்னேறி வருவதால், புதிய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படுவதுடன், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதனால் வடக்கு பிராந்தியத்தின் சுற்றுலா வளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்
ஒரு பூங்கா அல்லது சிறிய கட்டுமானத் திட்டம் ஒன்றை அமைப்பதன் மூலம் மட்டும் பொருளாதார மாற்றத்தை உருவாக்க முடியாது. பெரிய அளவிலான முதலீடுகள், தரமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஒருங்கிணைந்த திட்டங்கள் அவசியம்
யாழ்ப்பாணக் கோட்டை, கடற்கரை பகுதிகள் மற்றும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் சுத்தமாகவும் அழகாகவும் பராமரிக்கப்பட வேண்டும்
சுற்றுலாப் பயணிகள் அசுத்தமான சூழலுக்கு வரமாட்டார்கள். நாம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, சுற்றுச்சூழல் பராமரிப்பிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்
கடல் சுற்றுலா, கப்பல் சுற்றுலா (Cruise Tourism) போன்ற புதிய வாய்ப்புகளை பயன்படுத்துவதன் மூலம் வடக்கு மாகாணத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிக்க முடியும்
சுற்றுலாத்துறையில் ஈடுபடும் உள்ளூர் மக்களின் திறன்களை மேம்படுத்துவது அவசியம். விருந்தினர் இல்லங்கள் மற்றும் வீட்டுத் தங்குமிடங்களை நடத்துபவர்களுக்கு சர்வதேச தரத்திலான சேவைகளை வழங்குவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்
சுற்றுலாப் பயணிகளின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய தரமான சேவைகளை வழங்குவதற்கான திறனை நமது சமூகங்களில் உருவாக்க வேண்டும்
“Clean Sri Lanka” திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான சுற்றுலா மையங்களாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
வடக்கு மாகாணம் சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கான முக்கிய பிராந்தியமாக மாற வேண்டும்.
பல ஆண்டுகளாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவது எமது பொறுப்பு
அடுத்த ஐந்து ஆண்டுகளில் முக்கியமான சில பெரிய திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினால், வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp