யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அருட்கலாநிதி அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் ஆண்டகையின் நெடுந்தீவு பங்கிற்கான விஜயத்தை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டார்
பங்குத்தந்தை அருட்பணி நிலான் யூலியஸ் அடிகளாரின் தலைமையிலும் ஒழுங்கமைப்பிலும் இடம்பெற்ற இந்நிகழ்வுகளின் தொடக்கமாக, குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து கடற்படையின் விரைவுப் படகு மூலம் நெடுந்தீவு மாவிலி இறங்குதுறைமுகத்தை ஆயர் வந்தடைந்தார்.
அங்கு பங்கு அருட்பணிச்சபையினரால் வரவேற்கப்பட்ட ஆயர் , குதிரை வீரர்களின் அணிவகுப்புடன் நெடுந்தீவின் பிரதான வீதி வழியாக அழைத்துச் செல்லப்பட்டார்.
இவ்வரவேற்பு நிகழ்வில், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி மாணவிகளின் மேலைத்தேய இசைப் பாண்ட் அணிவகுப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வுகளில் அருட்பணி சோபன் றூபஸ் அடிகளார், அருட்சகோதரி மரினா சகாயம், அருட்சகோதரி சோதிநாயகி, ஆயரின் செயலாளர் அருட்பணி கமல்ராஜ் அடிகளார் உள்ளிட்ட அருட்பணியாளர்கள், துறவியர்கள் மற்றும் இறைமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

What’s your Reaction?

