செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திருடப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய நபர்..!

காலி, படபொல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் எத்கந்துர பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மோட்டார் சைக்கிள் 2024ஆம் ஆண்டு கரந்தெனிய பொலிஸ் பிரிவில் திருடப்பட்டது என்பதும், சந்தேகநபர் சில ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்துள்ளதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றச் செயல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்