அஹங்கம, கதலுவ பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டிப்பர் ரக வாகனம் வேறு ஒரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோதே, எதிரே வந்த பேருந்துடன் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
.


What’s your Reaction?

