கொழும்பில் மொரட்டுவை சோய்சாபுர அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சி பிரிவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கொழும்பு மற்றும் மொரட்டுவை மாநகர சபைகளுக்குச் சொந்தமான 6 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் குறித்த வீட்டின் உரிமையாளரான 84 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் மகன் உள்ளிட்ட மூவரும் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 15 வயதுடைய அயல்வீட்டு சிறுவன் ஒருவரும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, தீ விபத்துக்கான காரணம் எரிவாயு கசிவாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தீ விபத்துக்குள்ளான வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 20 எரிவாயு சிலிண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் இவ்வளவு அதிகமான எண்ணிக்கையிலான எரிவாயு சிலிண்டர்கள் ஏன் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பது இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
What’s your Reaction?

