அக்டோபரில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.5 இலட்சத்தை கடந்தது
இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கான ஒரு முக்கிய அடையாளமாக, கடந்த அக்டோபர் மாதத்தில் வந்த மொத்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1.5 இலட்சத்தை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 1 முதல் 29 வரை மொத்தம் 1,53,063 சுற்றுலாப் பயணிகள் இலங்கையைப் பார்வையிட்டுள்ளனர். இதில் இந்தியா அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை அனுப்பிய நாடாக விளங்குகிறது. அந்த காலப்பகுதியில் 44,741 இந்தியர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இது மொத்த வருகைகளில் 29.2 சதவீதம் […]









