உலக பொருளாதார மன்றத்தின் உயர்மட்ட சந்திப்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய
உலக பொருளாதார மாநாடு நடைபெறும் டாவோஸ் நகரில், ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாடோ கண்டாவை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு உலக பொருளாதார மாநாடு நடைபெறும் சுவிட்சர்லாந்தின் காங்கிரஸ் மையத்தில் இடம்பெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு, சுவிட்சர்லாந்தின் டாவோஸ்–க்லோஸ்டர்ஸ் நகரில் நடைபெறும் 56வது உலக பொருளாதார மன்ற மாநாட்டில் பங்கேற்கின்றது. பிரதமரையும் அவரது குழுவினரையும் சூரிச் விமான நிலையத்தில், ஜெனீவாவில் உள்ள ஐக்கிய […]









