உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இரவு வேலை பெண்களுக்கு பாதுகாப்பு கட்டாயம்

  • Feb 1, 2026 - 04:22 PM
  • 0 Comments

பெண்கள் இரவு பணியில் ஈடுபடுவது தொடர்பான புதிய ஒழுங்குவிதிகள் குறித்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண் சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் உணவுச் சேவைத் துறையில் பணிபுரியும் பெண்கள் மாலை 6.00 மணி முதல் காலை 6.00 மணி வரை பணியாற்றுவது தொடர்பாக இந்த ஒழுங்குகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வர்த்தமானி அறிவிப்பு தொழிலாளர் அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பணியாளர்கள் இரவு பணியில் ஈடுபடும் நேரங்களில் அல்லது பணி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்திய வரவுசெலவு திட்டத்தால் இலங்கை பெரும் ஆதாயம்

  • Feb 1, 2026 - 04:12 PM
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 13வது வரவுசெலவுத் திட்டம் இன்று காலை இந்திய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு 3 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது அண்டை நாடுகளுக்கான நிதி உதவி திட்டத்தின் கீழ் இலங்கைக்காக 3 பில்லியன் இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள அதே வேளை பூடானுக்கு 20.68 பில்லியன் ரூபாயும் நேபாளுக்கு 7 பில்லியன் இந்தியன் ரூபாயும் மாலத்தீவுக்கு 4 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வரவு செலவு திட்டத்தைநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாவலி அதிகாரசபையால் குடியிருப்புகளை அகற்றம் முடியும் குடியேற்றவும் முடியும்- அரசாங்கம்.

  • Feb 1, 2026 - 02:26 PM
  • 0 Comments

நாட்டின் பாசன அமைப்புகளை பாதுகாப்பதற்காக நீர்த்தேக்கக் குளங்களின் பாதுகாப்பு நிலப்பரப்புகளில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்புகளை அகற்ற அரசாங்கம் உறுதியாக செயல்படும் என விவசாய, கால்நடை, காணி; மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார். எதிர்ப்புகள் மற்றும் அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்த நடவடிக்கைகள் பின்வாங்கப்படமாட்டாது என்ற கடுமையான நிலைப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார். உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் ‘காலநிலை புத்திசாலித்தனமான நீர்ப்பாசன விவசாய திட்டம்’ கீழ் ‘கேஸ்கேட்’ முகாமைத்து குழு கையேடு அறிமுக நிகழ்வில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை மறுசீரமைப்பு நிதியத்தை முறைப்படுத்த புதிய சட்டம் – அரசாங்கம் துரித நடவடிக்கை

  • Feb 1, 2026 - 07:17 AM
  • 0 Comments

இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் கிடைக்கப்பெறும் பில்லியன் கணக்கான ரூபாய்களை நிர்வகிப்பதற்கும் முறைப்படுத்துவதற்குமாக ‘ஸ்ரீலங்கா மறுசீரமைப்பு நிதியத்தை’ முறையாக நிறுவுவதற்கான புதிய நாடாளுமன்றச் சட்டமூலம் ஒன்றினை அரசாங்கம் தற்போது வரைந்து வருகின்றது. இந்த நிதியத்திற்கு ஒரு சட்டப்பூர்வமான கட்டமைப்பை வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும். புதிய சட்டம் இயற்றப்படும் வரை, அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட விசேட இடைக்கால பொறிமுறையின் கீழ், திறைசேரியின் பிரத்யேகக் கணக்குகளின் ஊடாக இந்த நிதியம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. நிதி மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை குறைப்பு: மக்களுக்கு நிம்மதி

  • Feb 1, 2026 - 06:44 AM
  • 0 Comments

நாட்டில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்த புதிய விலைகள் இன்று முதல் அமலில் வந்துள்ளன. அதன்படி, ஒரு லிட்டர் ஆட்டோ டீசல் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 277 ரூபா ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பெட்ரோல் விலையும் லிட்டருக்கு 2 ரூபாவால் குறைக்கப்பட்டு 292 ரூபாவாக ஆக மாற்றப்பட்டுள்ளது. மற்ற அனைத்து வகை எரிபொருட்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை என சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.  

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் மீது CID வளையம் இறுக்கம்

  • Feb 1, 2026 - 06:15 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான விசாரணைகளில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சட்ட நடைமுறைகளை மீறிச் செயல்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்துள்ளார். 2023ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்திற்கு மேற்கொண்ட பயணத்தின் போது, சுமார் 1.66 கோடி முதல் 1.69 கோடி ரூபாய் வரையிலான அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முறைப்பாடு குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வொல்வர் ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க கௌரவப் பட்டம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிலக்கரித் தரம்: சிக்கலும் தீர்வும் இதோ

  • Feb 1, 2026 - 05:54 AM
  • 0 Comments

நடப்பில் உள்ள நீண்டகால நிலக்கரி தரக் குறைபாடுகள் காரணமாக நிறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்படக்கூடிய பற்றாக்குறையை சமாளிக்க 300,000 மெட்ரிக் டன் நிலக்கரியை அவசர கொள்முதல் முறையில் பெற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அவசியம் ஏற்பட்டாலே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடையே மட்டுமே டெண்டர் அழைக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இந்த வாரமே நடைமுறை தொடங்கும் என்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தரம் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தாலும், இலங்கை நிலக்கரி நிறுவனம் அல்லது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சமூக ஊடகப் பாதிப்புகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்க புதிய தேசியக் கொள்கை

  • Jan 31, 2026 - 08:40 PM
  • 0 Comments

சமூக ஊடகங்கள் சிறுவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து தேசிய ரீதியிலான மதிப்பீடு மற்றும் கொள்கை மீளாய்வு ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது. இன்று பெரும்பாலான பெற்றோர்கள் சமூக ஊடகங்களால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். இதற்குக் காரணியாக அமையும் தொழில்நுட்பத்தை முழுமையாகத் […]

உள்ளூர் இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

இந்தியா அனுப்பிய 10 பாலங்கள் இலங்கைக்கு

  • Jan 31, 2026 - 08:14 PM
  • 0 Comments

டிட்வா சூறாவளிக்குப் பிந்தைய மீள்கட்டமைப்பு பணிகளுக்கு உதவியாக இந்தியா மேலும் 10 ‘பெய்லி’ பாலங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது என்று இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், இப்பாலங்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கொழும்பு நோக்கி இந்திய கடற்படையின் கப்பல் மூலம் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார். சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதி போக்குவரத்து மற்றும் போக்குவரத்து இணைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைவாக மீளமைத்து அத்தியாவசிய சேவைகளை மக்கள் மீண்டும் பெறுவதனை உறுதிப்படுத்தவே […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கணக்காய்வாளர் நியமனம் இறுதி முடிவு பெப்ரவரி 3

  • Jan 31, 2026 - 07:54 PM
  • 0 Comments

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கான நியமனம் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரையை அரசியலமைப்பு சபை ஆய்வு செய்து இறுதி முடிவை பெப்ரவரி 3 ஆம் திகதி எடுக்கவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதி பரிந்துரைத்துள்ள நபரின் பெயர் ஐந்தாவது முறையாக அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்விவகாரத்தில் இறுதி தீர்மானம் எடுக்க அரசியலமைப்பு சபை இன்று கூடவிருந்தாலும், அந்த முடிவு அடுத்த செவ்வாய்க்கிழமைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். ‘ஜனாதிபதி புதிய பெயரை சமர்ப்பித்துள்ளார். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp