அமெரிக்கா தலைமை, ஈழத் மக்கள் நம்பிக்கை
ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பாதுகாக்கவும், தமிழினப் படுகொலைக்கான சர்வதேசப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவுக்கு கடிதம் எழுதிய அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வல்வெட்டித்துறை நகர சபை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. இது தொடர்பாக வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஈழத் தமிழ் மக்களின் இறையாண்மையை மீண்டும் நிலைநாட்ட அமெரிக்கா தலைமைத்துவப் பாத்திரத்தை ஏற்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோள் […]









