உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: இலங்கை மனித உரிமை ஆணைக்குழு அதீத கவனம்..!

  • Feb 12, 2026 - 10:14 AM
  • 0 Comments

அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில், சம்பவ தினத்தில் கடமையில் இருந்த ஊர்காவற்றுறை பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் தொடர்பான விசாரணைகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உயிரிழந்த நபர் பயன்படுத்திய வாகனத்தை […]

உள்ளூர் செய்திகள்

மண்ணின் உரிமை மீட்போம்! விகாராதிபதியுடன் கைகோர்த்த மக்கள் எழுச்சி கட்சி

  • Feb 8, 2026 - 02:53 PM
  • 0 Comments

தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தொடர்பான பிணக்குகளுக்கு 70 சதவீத தீர்வு எட்டப்படும் சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். இன்று நயினாதீவு நாகதீப விகாராதிபதியை நேரில் சந்தித்த அவர், காணி உரிமையாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை கையளித்தார். தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிக்கு ஈடாக, அதே அளவிலான மாற்று நிலத்தை விகாரைக்குச் சொந்தமான இடத்திலிருந்து உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் வழங்க வேண்டும் என இதன்போது கோரிக்கை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டி20 உலகக்கிண்ணம்: சூர்யகுமாரின் அதிரடி ஆட்டம் – ஆட்டநாயகன் விருதுகளில் புதிய மைல்கல்!

  • Feb 8, 2026 - 10:27 AM
  • 0 Comments

சர்வதேச டி20 கிரிக்கெட் அரங்கில் விராட் கோலியின் சாதனையை முறியடித்து சூர்யகுமார் யாதவ் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். தற்பொழுது நடைபெற்று வரும் டி20 உலகக்கிண்ணத் தொடரின் லீக் போட்டியில் இந்திய மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், 49 பந்துகளில் 10 நான்கு ஓட்டங்கள் மற்றும் 4 ஆறு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டிக்டொக்: சிறுவர்கள் மீது ஆபத்தான செயலி – ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!

  • Feb 8, 2026 - 10:15 AM
  • 0 Comments

டிக்டொக் செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய யூனியனின் விசாரணையின் ஆரம்ப முடிவுகளில், செயலியில் உள்ள சில அம்சங்கள் போதைப்பொருள் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் எல்லையற்ற ஸ்க்ரோல், தானாக இயங்கும் காணொளிகள், புஷ் அறிவிப்புகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை போன்ற அம்சங்கள் சிறுவர்களின் மனநலத்தை பாதிப்பதாகவும், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறும் செயல் எனவும் ஐரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டியுள்ளது. 2024 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வாகன உரிமையாளருக்கு நிம்மதி: மீண்டும் வருது இலக்கத்தகடு

  • Feb 8, 2026 - 08:08 AM
  • 0 Comments

நாட்டில் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முந்தைய கேள்வி கோரல் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலக்கத் தகடுகளை அச்சிடும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, தற்போது சுமார் 4 இலட்சம் இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இனிவரும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் பாய்வது ஏற்றுக்கொள்ள முடியாது- எப்.எம்.எம்

  • Feb 8, 2026 - 07:57 AM
  • 0 Comments

கடந்த வாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் தொடர்பான விவகாரங்களில், அரசாங்கம் தனது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்தியுள்ளது. சுதந்திர ஊடக இயக்கத்தின் அழைப்பாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் திலீஷா அபேசுந்தர ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அவதானிப்புகள் குறித்துத் தமது இயக்கம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தாம் உறுப்பினராக உள்ள சர்வதேச ஊடகவியலாளர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கையில் மரண வைரஸான நிபா? எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

  • Feb 8, 2026 - 07:46 AM
  • 0 Comments

நிபா வைரஸ் பரவல் அபாயம் குறித்து இலங்கையில் சுகாதார அதிகாரிகள் உயர் எச்சரிக்கை நிலையில் செயல்பட்டு வருகின்றனர். பிராந்திய நாடுகளில் அதிகரித்து வரும் கவலைகளை முன்னிட்டு, சந்தேகிக்கப்படும் தொற்று நிலைகளை விரைவாகக் கண்டறிந்து எதிர்கொள்ள கண்காணிப்பு நடவடிக்கைகளும் ஆய்வகத் தயார்நிலையும் பலப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் முன்னணி ஆய்வகமாகக் கருதப்படும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நிபா வைரஸை அடையாளம் காணும் பரிசோதனைத் திறனை சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளின் மூலம் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் சந்தேகிக்கப்படும் நோய்த்தொற்று நிலைகளை ஆரம்ப கட்டத்திலேயே […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சர்ச்சைக்குரிய நிலக்கரி ஒப்பந்தம் தொடர்கின்றது- எதிர்கட்சிகள் கையாலாகாத நிலையில்

  • Feb 8, 2026 - 07:21 AM
  • 0 Comments

ட்ரைடென்ட் கெம்பார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய நீண்டகால நிலக்கரி விநியோக ஒப்பந்தம் தொடர்ந்து அமுலில் இருக்கும் எனத் தெரியவருகிறது. குறித்த நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட மூன்றாவது கப்பல் தொகுதியின் நிலக்கரி, லங்கா நிலக்கரி நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்துள்ளமையே இதற்கு காரணமாகும். இது குறித்து மின்சக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால கருத்துத் தெரிவிக்கையில், லங்கா நிலக்கரி நிறுவனம் வழங்கிய முதற்கட்டத் தரப் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட அவசர நிலக்கரி கொள்வனவு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொள்கை தாமதம்; மின்சார சபை முடக்கம்

  • Feb 8, 2026 - 07:09 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபையை சட்டப்பூர்வமாகக் கலைத்து, அதனைப் புதிய நிறுவனங்களாக மறுசீரமைப்பதற்கான ‘நிர்ணயிக்கப்பட்ட திகதியை’ அறிவிப்பதில் தற்போது இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் பரிந்துரைக்கமைய நியமிக்கப்பட்ட குழு, தேசிய மின்சாரக் கொள்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதமே இந்த மறுசீரமைப்பு நடவடிக்கை பிற்போடப்படுவதற்குக் காரணமாக அமைந்திருப்பதாகத் தெரியவருகிறது. இதன் விளைவாக, ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த பிப்ரவரி 14-ஆம் திகதிக்குள் மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என துறைசார் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2025-ஆம் ஆண்டின் 14-ஆம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் 2 கோடி ரூபா போதைப்பொருளுடன் கைது!

  • Feb 6, 2026 - 07:58 AM
  • 0 Comments

இரண்டு கோடி ரூபாவுக்கும் மேலான மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இலங்கை பயணி ஒருவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைகளின் போது, இந்த போதைப்பொருளை மன்னார் பகுதிக்கு எடுத்துச் செல்ல இரண்டு நபர்கள், நீர்கொழும்பு நகரில் உள்ள ஒரு சொகுசு விற்பனை நிலையம் அருகே காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கிடையில், இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அந்த இரு நபர்களையும் கைது செய்தது. கைது […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp