உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

டிக்டொக்: சிறுவர்கள் மீது ஆபத்தான செயலி – ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை!

e0ae9fe0aebfe0ae95e0af8de0ae9fe0af8ae0ae95e0af8d e0ae9ae0aebfe0aeb1e0af81e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d e0aeaee0af80e0aea4 | Pathivu News

டிக்டொக் செயலியின் வடிவமைப்பு சிறுவர்களை அதற்கு அடிமையாக்கும் வகையில் அமைந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய யூனியனின் விசாரணையின் ஆரம்ப முடிவுகளில், செயலியில் உள்ள சில அம்சங்கள் போதைப்பொருள் போல பயனர்களை அடிமையாக்குவதை ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் எல்லையற்ற ஸ்க்ரோல், தானாக இயங்கும் காணொளிகள், புஷ் அறிவிப்புகள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரை வழிமுறை போன்ற அம்சங்கள் சிறுவர்களின் மனநலத்தை பாதிப்பதாகவும், டிஜிட்டல் சேவைகள் சட்டத்தை மீறும் செயல் எனவும் ஐரோப்பிய யூனியன் சுட்டிக்காட்டியுள்ளது.

2024 பெப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி, 13–18 வயது சிறுவர்கள் நள்ளிரவுக்குப் பிறகு அதிகம் டிக்டொக்கை பயன்படுத்துகின்றனர். 12–15 வயது சிறுவர்களில் 7 சதவீதம் தினமும் 4–5 மணி நேரம் இந்தச் செயலியில் செலவிடுவதாகத் தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தொழில்நுட்பத் தலைவர் ஹென்னா விர்க்குனென், டிக்டொக் தனது வடிவமைப்பில் மாற்றங்களைக் கொண்டு சிறுவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

விதிகளை மீறினால், நிறுவனத்தின் உலகளாவிய வருவாயில் 6 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp