இலங்கை கடற்படையால் கட்டைக்காட்டில் படுகொலை செய்யப்பட்ட மீனவர்களின் நினைவேந்தல்..!
சிறிலங்கா கடற்படையால் படுகொலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு 32ஆம் ஆண்டு நினைவேந்தல் கட்டைக்காடு சென்மேரிஸ் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நினைவேந்தல் நேற்று(18.02.2026) மாலை 04.00மணியளவில் ஆரம்பமாகியது. சுண்டிக்குளம் தொடுவாய் வாய்க்காலில் (18.02.1994) அதிகாலை, கடலில் கட்டுமரங்களில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையில் சிறிலங்கா கடற்படையின் டோரா படகுகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 10 கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர் மேற்படி கடற்றொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது. குறித்த நினைவேந்தலில் முதல் நிகழ்வாக படுகொலையை நினைவுகூரும் விதமாக […]









