இலங்கையில் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் – அமைச்சரவை பேச்சாளர்
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. உலக சந்தையில் விலை அதிகரித்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறான போர் சூழல் ஏற்படும் போது எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பது வழமையானதாகும். […]




