இந்த வாரத்தின் முக்கியமான நாட்கள் விசேஷங்கள் (8.10.2024 தொடக்கம் 14.10.2024 வரை)
10-ந்தேதி துர்க்காஷ்டமி. 12-ந்தேதி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சூரசம்கார பெருவிழா. 3-ந்தேதி (செவ்வாய்) சஷ்டி விரதம். திருப்பதி ஏழுமலையான் மோகினி அலங்காரம். கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் வெள்ளி சேஷ வாகனத்தில் பவனி. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் பவனி. சமநோக்கு நாள். 9-ந்தேதி (புதன்) திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் பவனி. திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள், உப்பிலியப்பன் கோவில் சீனிவாசப் பெருமாள் யானை வாகனத்தில் திருவீதி உலா. சிருங்கேரி சாரதாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம். கீழ்நோக்கு நாள். […]


