செய்திகள் உள்ளூர் முக்கிய செய்திகள்

திரைத் துருவங்கள் ரஜினி–கமல் மீண்டும் அதிரும் இணைவு

  • Feb 23, 2026 - 09:46 AM
  • 0 Comments

தமிழ் திரையுலகின் இருபெரும் துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர், சுமார் 47 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் இணையவுள்ள உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் புதிய திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி, தற்போது இணையத்தை அதிரவைத்து வருகின்றது. கடந்த 1970-களின் பிற்பகுதியில் ‘அபூர்வ ராகங்கள்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் இணைந்து நடித்திருந்த இவர்கள், அதன் பின்னர் நீண்டகாலமாகத் தனித்தனிப் பாதைகளில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிரித்தானிய மண்ணில் நாமலை முடக்கிய புலம்பெயர் இளையோர்

  • Feb 23, 2026 - 08:56 AM
  • 0 Comments

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் மாணவர் சங்கங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பங்கேற்கவிருந்த விவாத நிகழ்வுகளை ரத்து செய்துள்ளன. தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முதலில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் நாமலை அழைத்திருந்த நிலையில், அங்கு திட்டமிடப்பட்டிருந்த போராட்டங்கள் மற்றும் பாதுகாப்பு அச்சம் காரணமாக அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஒக்ஸ்போர்டு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானக் கனவுக்குத் தடை!

  • Feb 23, 2026 - 08:47 AM
  • 0 Comments

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. முறையான சுற்றாடல் அனுமதியைப் பெறும் வரை எவ்வித கட்டுமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது என அந்த சபை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ஷ, மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் […]

சாவு அறிவித்தல்!

பெரும் சோகத்தை ஏற்படுத்திய இளம்வைத்தியரின் மரணம்..!

காரைதீவை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட மட்டக்களப்பு வைத்தியசாலையின் இளம் வைத்தியரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது.மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார் .அம்பாறை காரதீவை பிறப்பிடமாக கொண்ட மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி மட்டக்களப்பு அரசடியில் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாதாள உலக குழுவினருடன் தொடர்புகளை பேணிய அரசியல்வாதிகள்..!

  • Feb 20, 2026 - 02:59 PM
  • 0 Comments

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) பாராளுமன்றில் தெரிவித்தார். பத்மே உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்களிடம் இருந்த 30 தொலைபேசிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி, குறித்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

  • Feb 20, 2026 - 02:56 PM
  • 0 Comments

ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர், மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் நேற்று (19 02.2026) மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து 21,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்போருக்கான அறிவிப்பு..!

  • Feb 20, 2026 - 02:52 PM
  • 0 Comments

கச்சத்தீவு திருவிழாவுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பிரதீபன் விளக்கமளித்துள்ளார். இந்த திருவிழாவானது எதிர்வரும் 27 ஆம், 28 ஆம் திகதிகளில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், குறித்த திருவிழாவுக்கு செல்லும் யாத்திரிகர்களின் நன்மைக் கருதி 27 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி முதல் பி.ப 01.00 மணி வரை அரச மற்றும் தனியார் பேருந்துகள் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரை சேவையில் ஈடுபடும் என தெரிவித்துள்ளார். […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்க கடற்படை தளபதி பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்..!

  • Feb 20, 2026 - 02:49 PM
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பசுபிக் கப்பற்படையின் கட்டளைத்தளபதியான அட்மிரல் ஸ்டீவ் கேலர், இலங்கையின்பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வுபெற்ற) எயா வைஸ்மாஷல் சம்பத் துயகொன்தவை நேற்று (19.02.2026) நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இறையாண்மையைப் பாதுகாத்து பிராந்தியப் பாதுகாப்பை பலப்படுத்துகின்ற வெளிப்படையான பங்காண்மையினை மீள வலியுறுத்துவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நடைமுறை ரீதியிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மைக்கு உதவி செய்வதற்காக கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துதல் என்பன தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. எமது […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கூலிப்படையால் நடந்தேறிய வாள் வெட்டு தாக்குதல்..!

  • Feb 20, 2026 - 02:46 PM
  • 0 Comments

தமிழர் பகுதியில் கோரம் கற்கோவளம், பருத்தித்துறையை சேர்ந்த திருமதி. பாலபாரதி நிர்மலா எனும் 65 வயதுடைய வயோதிபப் பெண் மீது நள்ளிரவு 12:30 மணியளவில் மூன்று பேரால் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று முன்தினம்(18.02.2026) குறித்த வயோதிபப் பெண்ணின் மகனிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை பழி தீர்க்கும் வகையில் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வயோதிபப் பெண் அவரது கணவருடன் வீட்டில் தனித்து இருந்த நிலையில் நள்ளிரவில் வீடு புகுந்த […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் விக்ரமசிங்கவின் மனைவிக்கு இன்று CIDக்கு அழைப்பு..!

  • Feb 20, 2026 - 02:41 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மனைவியான மைத்ரி விக்ரமசிங்க இன்று (20.02.2026) குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி குற்ற விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இன்றைய தினம் அவரை நிதி குற்றப் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, கடந்த 18ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, வாக்குமூலம் ஒன்றினைப் பதிவு செய்து கொள்வதற்காகவே மைத்ரி விக்ரமசிங்கவுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp