உள்ளூர் செய்திகள்

உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கும்

  • Oct 12, 2024 - 03:25 AM
  • 0 Comments

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் உலக உணவுத் திட்டத்தின் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று (11) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தனர். உலக உணவுத் திட்டத்தின் ஊடாக இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு பிரதிநிதிகள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். இலங்கையில் உணவு நெருக்கடி நிலைமை தற்போது குறைவாக உள்ள போதிலும்இ தேவை ஏற்படும் போது புதிய வேலைத்திட்டங்கள் மூலம் இலங்கைக்கு ஆதரவளிக்க உலக உணவுத் திட்டத்தின் தலைவர்கள் ஜனாதிபதியின் செயலாளரிடம் விருப்பம் […]

உலகம் செய்திகள்

ஜப்பானைச் சேர்ந்த பிரபல அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Oct 12, 2024 - 03:18 AM
  • 0 Comments

ஜப்பானில் உள்ள நிஹான் ஹிடான்க்யோ அமைப்பு கடந்த  2024 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளது. இந்த அமைப்பு இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு குண்டு வீசப்பட்டதில் உயிர் தப்பியவர்களின் சமூகமாகும். இவர்கள், அணு ஆயுதங்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் பெரும் பங்காற்றியமைக்காக  இந்தப்  பரிசை பெற்றுள்ளனர். ஹிபாகுஷா என அழைக்கப்படும் குறித்த அமைப்பினர், அணு ஆயுதங்கள் உலகில் மீண்டும் பயன்படுத்தப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

  • Oct 12, 2024 - 03:07 AM
  • 0 Comments

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில் நுட்பகோளாறு காரணமாக, சுமார் 2 மணி நேரம் 35 நிமிடமாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்த நிலையில் பத்திரமாக தரையிரக்கப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 144 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணியளவில் புறப்பட்டது. வழக்கமாக விமானம் தரையிலிருந்து மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே […]

விளையாட்டு

பாகிஸ்தான்- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் 500 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தும் ; பாகிஸ்தான் தோல்வி:

  • Oct 11, 2024 - 02:54 PM
  • 0 Comments

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் 7-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 149 ஓவரில் 556 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 267 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஆகா ஜமான், ஆமீர் ஜமால் ஆகியோரை தவிர மற்ற வீரர்கள் […]

உலகம்

அமெரிக்காவை பலி தீர்த்தது பாலஸ்தீனர்களின் கண்ணீர்?

  • Oct 11, 2024 - 02:43 PM
  • 0 Comments

மில்டன் புயலால் 11 பேர் உயிரிழப்பு கோடிக்கணக்கான சொத்துக்கள் இழப்பு புயல் காரணமாக புளோரிடாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. புளோரிடா மாகாணத்தை கடந்த மாதம் 26-ந்தேதி ஹெலீன் புயல் தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. அட்லாண்டிக் பெருங்கடலில் மெக்சிகோவின் யுகேட்டான் தீபகற்பத்தையொட்டிய பகுதிகளில் அதி தீவிர புயல் உருவானது. மில்டன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கரையை கடக்க உள்ளது. அதிவேக சூறாவளிக் காற்றுடன், தீவிர மழை பெய்தது. அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. […]

உள்ளூர்

எமில்காந்தன் வன்னி தேர்தல் மாவட்டத்தில் களமிரங்கினார்

  • Oct 11, 2024 - 02:12 PM
  • 0 Comments

வன்னித்தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை எமில்காந்தன் இன்று வெள்ளிக்கிழமை (11) தாக்கல் செய்தார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் எமில்காந்தன் தலைமையிலான வேட்பாளர்கள் குழு சுயேட்சையாக போட்டியிடுகின்றது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது. இதன்போது போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் வருகைதந்திருந்தனர்.  

செய்திகள்

வன்னியில் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல் – சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் களத்தில்

  • Oct 11, 2024 - 02:07 PM
  • 0 Comments

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலை கூட்டணி இன்று (11) தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது. வன்னி மாவட்டத்தில் இக்கூட்டணியானது சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணனை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடுவதுடன், விசேட தேவையுடைய பெண்ணொருவரும் வேட்பாளராக […]

உள்ளூர் செய்திகள்

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் – குருசாமி சுரேந்திரன்

  • Oct 11, 2024 - 02:02 PM
  • 0 Comments

வடக்கில் உள்ள ஒன்றரை இலட்சம் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (10) அராலியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்இ தொடர்ந்தும் தமிழ் தேசியத்திலே பயணித்துக்கொண்டிருக்கின்ற மக்கள் தென்னிலங்கை வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம் தேசியத்தை உறுதி செய்ய முடியும் என்ற […]

செய்திகள்

வன்னியில் தேர்தல் மாவட்டத்தில் மீண்டும் காதர் மஸ்தான் போட்டி

  • Oct 11, 2024 - 01:54 PM
  • 0 Comments

வன்னி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இன்று (11) தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர் கட்சியில் கங்காரு சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் வருகை தந்திருந்தனர்.

கட்டுரை

சர்வதேச உறவுகளில் புதிய தொடக்கத்தை ஜெனீவாவில் முனைப்பாக வெளிக்காட்ட முடியும் – கலாநிதி ஜெகான் பெரேரா

  • Oct 11, 2024 - 08:23 AM
  • 0 Comments

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலின் முடிவில் அக்கறையுடன் கவனம் செலுத்திய வெளிநாட்டு தூதரகங்கள் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு பிறகு ஒரு கணமேனும் தாமதிக்காமல் அவருக்கு நேசக்கரம் நீட்டின. தேர்தலுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே மேற்குலக நாடுகளின் விருப்பத்துக்குரியவராக விளங்கினார் போன்று தோன்றியது. பொருளாதாரத்தை விக்கிரமசிங்க கையாண்ட முறையைப் பாராட்டி அந்த நாடுகள் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டன. சர்வதேச நாணய நிதியமும் அதேபோன்று அவருக்கு ஆதரவான அறிக்கைகளை வெளியிட்டது. விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் மேற்குலக நாடுகளின் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp