செய்திகள்

வன்னியில் தமிழர் விடுதலை கூட்டணி வேட்பு மனு தாக்கல் – சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணன் களத்தில்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவினை தமிழர் விடுதலை கூட்டணி இன்று (11) தாக்கல் செய்தது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலை கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் இன்று காலை வேட்புமனுவினை தாக்கல் செய்திருந்தது.

வன்னி மாவட்டத்தில் இக்கூட்டணியானது சமூக ஆர்வலர் சந்திரகுமார் கண்ணனை முதன்மை வேட்பாளராக கொண்டு போட்டியிடுவதுடன், விசேட தேவையுடைய பெண்ணொருவரும் வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்