முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

மொரட்டுவை கடற்கரையில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு..!

  • Feb 23, 2026 - 12:06 PM
  • 0 Comments

கொழும்பு – மொரட்டுவை, கொரலவெல்ல ஜூபிலி வீதி கடற்கரையில் பெண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மொரட்டுவை, கொரலவெல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணுடன் தனிப்பட்ட தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்களிடம், பெண்ணின் மரணம் தொடர்பாக வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட கோபத்தினால் […]

முக்கிய செய்திகள் உலகம் புதியவை

பாழடைந்த கட்டடத்தில் சட்டத்தரணி செய்த கேவலமான செயல்..! அதிரடியாக கைது செய்த பொலிஸார்

  • Feb 23, 2026 - 12:05 PM
  • 0 Comments

கொழும்பு, வாழைத்தோட்டம் காவல்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த சட்டத்தரணி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாஞ்சியாரச்சி மாவத்தை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் வைத்து சட்டத்தரணி கைது செய்யப்பட்டார். இதன்போது சட்டத்தரணியிடம் இருந்து ‘ஐஸ்’ ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர் களுபோவில, சரணங்கர வீதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு சட்டத்தரணியாகப் பதவியேற்ற இவர், புதுக்கடை நீதவான் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

16 வயது சிறுவனால் படுகொலைசெய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி..!

  • Feb 23, 2026 - 12:01 PM
  • 0 Comments

புத்தளம் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரைக் கடத்தி கொலை செய்து, அந்த வாகனத்தைக் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் புத்தளம், தில்லையடி – ரத்மல்யாய பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரிவிக்கப்படுகிறது. நேற்று (22) காலை புத்தளம் அடப்பனாவில்லு பகுதியில் உள்ள வடிகான் ஒன்றிற்குள் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். இதன்போது, உயிரிழந்தவர் கடந்த 21ஆம் திகதி […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள் வணிகம்

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும்..!

  • Feb 23, 2026 - 11:59 AM
  • 0 Comments

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை இலகுவாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 5.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் அலுவலகத்தை நேற்று (22) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த வருடம் தபால் திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 13,450 […]

முக்கிய செய்திகள் ஈழம் உலகம் புதியவை

சுவிஸ் தேர்தலில் ஈழத் தமிழ் இளைய தலைமுறை..!

  • Feb 23, 2026 - 11:57 AM
  • 0 Comments

சுவிஸ் லவுசான் நகராட்சித் தேர்தல் 2026 ஐ முன்னிட்டு, தமிழ் சமூகத்தைச் சேர்ந்த இளம் வேட்பாளர் அக்சனா குமாரசாமி போட்டியிடுகிறார். அரசியல் மற்றும் நிர்வாகத்துறையில் உயர் கல்வி கற்று வரும் அவர், பொதுக் கொள்கை மேலாண்மையில் முதுகலைப் பட்டம் (Master in Public Policy) பெற்றவராக அறியப்படுகிறார். மேலும், தமிழ் மொழிக் கல்வியிலும் தகுதி பெற்றுள்ளதுடன், சமூக மற்றும் பண்பாட்டு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். அக்சனா குமாரசாமி, Swiss Social Democratic Party (PS) கட்சியின் பட்டியல் […]

முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை

3 இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்..!

  • Feb 23, 2026 - 11:56 AM
  • 0 Comments

சந்தைக்கு 3 லட்சம் சமையல் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் பணிகள் இன்று (23.02.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 3,900 மெட்ரிக் டன் எரிவாயுவை தாங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், அதனைத் தரையிறக்கும் பணிகள் நேற்றே ஆரம்பிக்கப்பட்டன. மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் எதிர்வரும் 25 மற்றும் 28ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளன. இந்நிலையில் இன்று முதல் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் […]

முக்கிய செய்திகள் உள்ளூர் புதியவை விளையாட்டு

இலங்கையின் தோல்வி குறித்து மெத்திவ்ஸ் ஆதங்கம்..!

  • Feb 23, 2026 - 11:54 AM
  • 0 Comments

உலக கிண்ண இருபதுக்கு 20 தொடரில் இங்கிலாந்து அணியுடன் நேற்று (22) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியின் தோல்வியை அடுத்து, இலங்கை அணியின் மோசமான துடுப்பாட்டத்தை அதன் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸூம் விமர்சித்துள்ளார். இது தொடர்பில் தமது எக்ஸ் கணக்கில் அவர் தெரிவித்துள்ளதாவது, சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை! இலங்கை அணியின் துடுப்பாட்டம் மிகப்பரிதாபம். பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்ட போதிலும், எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் பொறுப்புடன் விளையாடி வெற்றியை ஈட்டித் தர முன்வரவில்லை. இது மிகவும் வேதனைக்குரியது! […]

முக்கிய செய்திகள் உலகம் உள்ளூர் புதியவை

அமெரிக்கா – ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தை திகதி அறிவிப்பு..!

  • Feb 23, 2026 - 11:52 AM
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தை நடைபெற கூடிய இடம் மற்றும் நாள் உள்ளிட்ட விவரங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஜெனீவா நகரில் எதிர்வரும் 26-ஆம் திகதி பேச்சுவார்த்தை நடைபெறும் என ஓமன் வெளியுறவு துறை அமைச்சர் பத்ர அல் புசைதி உறுதிப்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் எக்ஸ் கணக்கில் வெளியிட்டு உள்ள செய்தியில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தையானது எதிர்வரும் வியாழக்கிழமை ஜெனீவாவில் நடைபெற உள்ளது என மகிழ்ச்சியுடன் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

அக்குரேகொட இரட்டை கொலை சந்தேகநபர் வௌிப்படுத்திய பரபரப்பு தகவல்..!

  • Feb 23, 2026 - 11:51 AM
  • 0 Comments

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி பல முக்கிய தகவல்களைப் பொலிஸாரிடம் வௌிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் நேற்று முன்தினம் (21) மாலை 6.20 மணியளவில் அம்பலாங்கொடை, தெல்துவ பகுதியில் வைத்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். சட்டத்தரணியை டி-56 ரக துப்பாக்கியால் சுட்டவர் இவரே என சந்தேகிக்கப்படுகிறது. 46 வயதான சுனில் ரஞ்சித் எனப்படும் இவர், […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் மழையுடனான வானிலை குறைவடையும் சாத்தியம்..! 23.02.2026

  • Feb 23, 2026 - 11:46 AM
  • 0 Comments

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp