செய்திகள்

ரணிலின் பாதையில் செய்ய அநுர சம்மதித்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது

  • Nov 24, 2024 - 01:26 PM
  • 0 Comments

அநுர அரசானது சர்ச்சைக்குரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சம்மதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார் கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பெறப்பட்ட நான்கு வருட கடனை தொடர்ந்தும் வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லையென பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டினார். புதிதாக […]

உள்ளூர்

தமிழ் மக்கள் பேரவையின் மாதிரி வரைபை அடிப்படையாக வைத்து பேச தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

  • Nov 24, 2024 - 01:12 PM
  • 0 Comments

தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையானது தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்ட முன்மொழிவை அடிப்படையாக கொண்டு அமைய வேண்டுமென அவர் நிபந்தனை விதித்துள்ளார இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொண்டுள்ளது. புதிய அரசானது அடுத்துவரும் காலப்பகுதியில் புதிய […]

செய்திகள்

இந்தியா இலங்கையில் அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம்

  • Nov 24, 2024 - 12:59 PM
  • 0 Comments

அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம். அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் அரசின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் கொடுக்கல் – வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற நட்பு நாடு என்ற வகையில் சீனா மீது அன்பு உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர குறிப்பிட்டார். இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர். இலங்கையின் பொருளாதார மேம்பாட்டின் அடிப்பைடயில் இந்தியாவுடன் எமது கொடுக்கல் – வாங்கல்கள் […]

உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது

  • Nov 24, 2024 - 12:46 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக இன்று (24) மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் திறந்து வைக்கப்பட்டது தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்துக்கு முன்பாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட இக்கல்வெட்டுக்கள் எதிர்வரும் 27ஆம் திகதி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாவீரரின் தாய் ஒருவரால் கொடியேற்றப்பட்டு, பின்னர் ஈகைச் சுடரேற்றப்பட்டு கல்வெட்டுக்கள் ஒரே நேரத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டன.

உள்ளூர் செய்திகள்

தாய்நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஒன்றிணையுமாறு அரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு

  • Nov 23, 2024 - 08:32 AM
  • 0 Comments

அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசியலமைப்பையும் சட்டங்களையும் விட மக்களின் அதிகாரம் பலமானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் வழங்கப்பட்ட ஆணைகளின் கட்டமைப்பு மற்றும் வடிவங்களைப் பார்க்கும் போது மக்களின்; எதிர்பார்ப்புக்கள் பிரதிபலிக்கின்றன. மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்துக்கு அரசியல் தலைமைத்தவத்தை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கமும் தனக்கு கிடையாது என அநுரகுமார தெரிவித்துள்ளார். மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தில் அரச சேவையின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை […]

உள்ளூர் செய்திகள்

சீனா 1888 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கின்றது

  • Nov 23, 2024 - 08:14 AM
  • 0 Comments

வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை உயர்த்தும் வகையில் சீனா 552 மில்லியன் சீன யுவான் நிதியுதவியினை இலங்கை;கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்தானது. இதன் கீழ் வறிய குடும்பங்களுக்கு 1,888 வீடுகளும் 108 வீடுகள் மூத்த கலைஞர்களுக்கும் வழங்கப்படவுள்ளது அதற்கான ஒப்பந்தம் நேற்று (22) பத்தரமுல்ல, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் கலாநிதி […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளருக்கும் ஜப்பானிய தூதுவருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

  • Nov 23, 2024 - 02:04 AM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை திறம்பட தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இதேவேளை வீண் விரயம், ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதிய கொள்கைக்கு ஜப்பான் அரசாங்கத்தின் பாராட்டுக்களை தெரிவித்த அகியோ இசோமடா, இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறந்த ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   https://athavannews.com/ […]

உள்ளூர் செய்திகள்

யாழில் தொடர் மழையால் 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  • Nov 23, 2024 - 01:55 AM
  • 0 Comments

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2,294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதில் தென்மராட்சி பிரதேசத்தில் வசிக்கும் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட […]

உள்ளூர் செய்திகள்

யாழ் வட்டுக்கோட்டை பகுதியில் விபத்தில் சிக்கிய இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

  • Nov 23, 2024 - 01:13 AM
  • 0 Comments

இந்த விபத்தில் உயிரிழந்தவர், அராலி மத்தி வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் என்பதோடு இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பெண் வைத்தியர் ஒருவரின் காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.   சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். […]

உள்ளூர் செய்திகள்

பெண் ஒருவரிடம் பாலியல் கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது.

  • Nov 23, 2024 - 01:07 AM
  • 0 Comments

பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு , சுன்னாகம் பொலிஸ் பிரிவில் வசிக்கும் பெண்ணொருவர் தனது காதலனுடன் இருக்கும் படங்கள் மற்றும் காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. படங்களை வைத்து பெண்ணை அடையாளம் கண்டு கொண்ட இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் அவரது வீட்டுக்கு சென்று தாம் கொழும்பில் இருந்து வந்துள்ள பொலிஸ் விசேட பிரிவினர் என அறிமுகப்படுத்திக்கொண்டு , பெண்ணிடம் விசாரணைகளை மேற்கொண்டு அவரது தொலைபேசி இலக்கங்களை பெற்று சென்றுள்ளனர். பின்னர் விசாரணைகளின் அடிப்படையில் , சட்ட […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp