உள்ளூர் செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

  • Dec 3, 2024 - 11:02 AM
  • 0 Comments

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது. இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது. இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் […]

உள்ளூர் செய்திகள்

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது வார சபை அமர்வு நேரலை!

  • Dec 3, 2024 - 10:25 AM
  • 0 Comments

  பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதையும் படியுங்கள்> ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்த உத்தரவு!  

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்த உத்தரவு!

  • Dec 3, 2024 - 10:12 AM
  • 0 Comments

மக்களின் பாதுகாப்பிற்காக நாடளாவிய ரீதியில் இராணுவத்தினரை வரவழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதையும் படியுங்கள்> நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை! அத்துடன் 10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு தற்போது சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல தலைமையில் […]

உள்ளூர் செய்திகள்

நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை!

  • Dec 3, 2024 - 09:58 AM
  • 0 Comments

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதி முதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதையும் படியுங்கள்> பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று! அதன்படி நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய […]

உள்ளூர் செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று!

  • Dec 3, 2024 - 09:48 AM
  • 0 Comments

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் […]

உள்ளூர் செய்திகள்

மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்க வேண்டும் – ஜனாதிபதி

  • Dec 3, 2024 - 09:39 AM
  • 0 Comments

எதிர்வரும் மாதங்களில் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் தொடர்ச்சியாக அரிசியை நுகர்வோருக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சிறு மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களை அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கும் இடையே நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. மக்களுக்குத் தட்டுப்பாடின்றி அரிசியை வழங்கும் வகையில் நாட்டில் களஞ்சிய வசதிகளை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன் போது கலந்துரையாடப்பட்டது. இதையும் […]

உள்ளூர் செய்திகள்

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

  • Dec 3, 2024 - 09:30 AM
  • 0 Comments

இன்றைய தினம் கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் […]

உள்ளூர் செய்திகள்

சுதுமலையில் கிணற்றுக்குள் தவறி விழுந்த பூசகர் பரிதாபமாக உயரிழப்பு!

  • Dec 3, 2024 - 12:00 AM
  • 0 Comments

வீட்டு கிணற்றில் குளித்துக்கொண்டு இருந்தவேளை தவறி கிணற்றிற்குள் விழுந்த பூசகர் ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன் போது சுதுமலை தெற்கு மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் குறித்த பூசகர் மரணச் சடங்கு ஒன்றிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துக்கொண்டு இருந்தவேளை கால்தவறி கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் கிணற்றினுள் மிதப்பதை அவதானித்த உறவினர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் […]

உலகம் செய்திகள்

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில்15 பேர் பலி!

  • Dec 2, 2024 - 11:02 PM
  • 0 Comments

இஸ்ரேலிய இராணுவம் காசாவின் வடக்கு பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெய்ட லஹியா நகரில் உள்ள கட்டம் ஒன்றில் தங்கி இருந்தவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் இந்தப் பிரதேசத்தைக் குறிவைத்துக் கடந்த சில வாரங்களாகத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதையும் படியுங்கள்>உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த […]

உள்ளூர் செய்திகள்

ஒதியமலைப் படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு.

  • Dec 2, 2024 - 10:28 PM
  • 1 Comment

முல்லைத்தீவு,ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட 32 தமிழ் மக்களின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (02.12.2024) இன்று உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது. ஒதியமலைக் கிராமத்தில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபி வளாகத்தில் குறித்த நினைவேந்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்தவகையில் படுகொலைசெய்யப்பட்ட உறவுகளுக்கு ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், நினைவுத் தூபிகளுக்கு மலர்தூவி, மலர்மாலை அணிவிக்கப்பட்டு உறவுகளால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த நினைவிட வளாகத்தில் நினைவேந்தல் கூட்டமொன்று இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஒதியமலை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp