இந்திய மீனவர்கள் 23 பேருக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை!
கடந்த மாதம் 10 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பிற்கு அண்மையில் அத்துமீறி மீன்பிடியில ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 23 பேரும் இன்று யாழ். ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகளினால் நீதவான் நளின சுபாஸ்கரன் முன்னிலையில் முற்படுத்தப்படுத்தப்பட்டனர். வழக்கினை ஆராய்ந்த நீதவான் இந்திய மீனவர்கள் 23 பேருக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி […]









