உள்ளூர் செய்திகள்

அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு சவால் விடுத்த நாமல்!

  • Dec 19, 2024 - 03:09 AM
  • 0 Comments

சட்டப் பரீட்சைக்கு முகங்கொடுத்த விதம் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் பரீட்சை மீள நடத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் இதனைக் குறிப்பிட்டார். இந்த அவமதிப்பு நாமல் ராஜபக்ஷவை இலக்காகக் கொள்ளவில்லை என்றும், முழு சட்ட அமைப்பையும் குறிவைத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் எனவே உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ […]

உள்ளூர் செய்திகள்

அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை! – ஜனாதிபதி

  • Dec 19, 2024 - 03:02 AM
  • 0 Comments

அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் முன்னெடுக்கும் பரிவர்த்தனைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் எக்கோனமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது ‘நாங்கள் அடிப்படையில் எங்கள் முதலீடுகள் மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டுள்ளோம். அதானி குழுமம் ஏனைய நாடுகளுடன் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதில் இலங்கை அக்கறை கொள்வதில்லை. அதானி நிறுவனம் நாட்டில் எவ்வாறான பணிகளை […]

உள்ளூர் செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தை திருத்த சந்தர்ப்பம் கிடைத்தும் அரசாங்கம் ஒரு வசனத்தையேனும் திருத்தவில்லை – ஹர்ஷடி சில்வா

  • Dec 19, 2024 - 02:55 AM
  • 0 Comments

பாராளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரத்தை மேன்படுத்துவதற்காக வேண்டி இந்திய அரசாங்க்ததுடன் பல்வேறு இணக்கப்பாடுகளுக்கு அரசாங்கம் வந்திருப்பதாக தெரியவருகிறது. இதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எமது அண்மை நாடான இந்தியாவுடன் நாங்கள் சிறந்த உறவை வைத்திருக்க வேண்டும். எப்போதும் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய நாடாகும். என்றாலும் பெற்றோலியம் குழாய் தொடர்பில் இந்தியாவுடன் எந்த தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளப்போவதில்லை என தேசிய […]

உள்ளூர் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிறைவு: யாழில் நினைவு கூரப்பட்டது.

  • Dec 19, 2024 - 02:48 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசு கட்சி ஆரம்பிக்கப்பட்டு  75 ஆண்டுகள் பூர்த்தியானதை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு இன்று யாழ். நகரில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா சிலைக்கு,இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்களால் மலர் மாலை அணிவித்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், […]

உள்ளூர் செய்திகள்

யாழில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்!

  • Dec 19, 2024 - 02:30 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அதன்போது, மாவட்டச் செயலகத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தரம் 9 மற்றும் தரம் 9க்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய மற்றும் குழு வகுப்பு செயற்பாடுகளை மாணவர்களின் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்காகவும், அறநெறிசார் செயற்பாடுகளுக்காகவும், வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் […]

உள்ளூர் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவாலயம் அமைக்கப்படவேண்டும் – துரைராசா ரவிகரன்

  • Dec 19, 2024 - 02:19 AM
  • 0 Comments

பாராளுமன்றில் சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27 ம் திகதி எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச் செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில் […]

கனடா செய்திகள்

மக்களின் கோபத்துக்குள்ளான கனடா பிரதமர்!

  • Dec 19, 2024 - 02:11 AM
  • 0 Comments

நல்ல மாற்றங்களைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்த ஜஸ்டின் ட்ரூடோ 2015ஆம் ஆண்டு கனடாவின் பிரதமரான போது, நாடே அவரைக் கொண்டாடியது. ஆனால் இன்று, நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஆகிய விடயங்கள், ட்ரூடோ மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ட்ரூடோ பதவி விலகவேண்டும் என அவரது கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் அழுத்தம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. ஆளுங்கட்சி அமைச்சர்களில், நிதி அமைச்சரான கிறிஸ்டினா ஃப்ரீலேண்ட், வீட்டு வசதித்துறை […]

கனடா செய்திகள்

புதிய எல்லை விதிகளை அறிமுகப்படுத்திய கனடா!

  • Dec 19, 2024 - 01:54 AM
  • 0 Comments

நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க எல்லையில் பரந்த அளவிலான புதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கான திட்டங்களை கனடா அறிவித்துள்ளது. கனடா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும் மற்றும் அதன் மொத்த ஏற்றுமதியில் சுமார் 75மூ அமெரிக்காவையே சார்ந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், குடியேற்றவாசிகள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களின் ஓட்டத்தைத் தடுக்க கனடா தனது பகிரப்பட்ட எல்லையைப் பாதுகாக்காவிட்டால், கனேடிய பொருட்களுக்கு 25மூ வரி விதிக்கப்படும் என கூறியதை அடுத்து, பிரதமர் […]

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)18.12.2024

  • Dec 19, 2024 - 12:39 AM
  • 0 Comments

மின்சாரம் தாக்கி பசுவொன்று பலியானது, யார் கரணம்? காணொளி இணைக்கப்பட்டுள்ளது சாவகச்சேரி செயலாளருக்கு என்ன தெரியும்? வர்த்தகர் கேள்வி. காணொளி இணைப்பு கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம் https://youtu.be/GYgddtMKrh4

செய்திகள்

கொழும்பிலிருந்து பயணித்த பஸ் ஏ-9 வீதியில் விபத்து : 5 பேர் காயம்

  • Dec 18, 2024 - 09:38 AM
  • 0 Comments

யாழ் நோக்கி பயணித்த பஸ் ஏ-9 வீதி மிருசுவில் பகுதியில் விபத்திற்குள்ளானது கொழும்பிலிருந்து பயணிகளுடன் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து  ஒன்று, சிறிய ரக உழவு இயந்திரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 5 பேர் காயமடைந்ள்ளனர். இன்று (18) அதிகாலையில் ஏ-9 வீதி, மிருசுவில் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp