செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கல்முனையில் நெகிழ்ச்சி சம்பவம் ; 34 வாரங்களிலேயே ஒரே பிரசவத்தில் பிறந்த மூன்று குழந்தைகள்..!

  • Feb 27, 2026 - 09:29 AM
  • 0 Comments

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன. சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த இன்சாத் பானு கல்முனை அமைந்துள்ள அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே தடவையில் 34 வாரங்கள் பூர்த்தியடையாத நிலையில் பிறந்த மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். பிறந்த மூன்று ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளதுடன், தாயின் உடல் நலவும் சிறந்த முறையில் இருப்பதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் நலனுக்காக வைத்தியசாலையில் விசேட துஆப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உண்மை கண்டறியும் ஆணைக்குழு – உலகிற்கு இலங்கை தந்த வாக்குறுதி!

  • Feb 27, 2026 - 08:49 AM
  • 0 Comments

ஜெனவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61-ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றிய இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சுமித் தசநாயக்க, நாட்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவதற்கான பூர்வாங்கக் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகப் புதிய ‘அரசைப் பாதுகாக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை’ உருவாக்குவதற்கான பொதுமக்களின் ஆலோசனைகள் தற்போது பெற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பிடியில் சிக்கிய பாதாள உலகத்தலைவன் – பலத்த பாதுகாப்பில் பொடி லசி!

  • Feb 27, 2026 - 08:44 AM
  • 0 Comments

இலங்கையில் பல்வேறு கொலைச் சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பாதாள உலகக் கும்பல் தலைவனான ஜனித் மதுஷங்க டி சில்வா எனப்படும் ‘பொடி லசி’, இன்று காலை இலங்கைக்கு கொண்டுவரப்பட்ள்ளார். இந்தியாவிற்குச் சென்றிருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவொன்றினால் அவர் பலத்த பாதுகாப்புடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலபிட்டிய நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த திறந்த பிடியாணைக்கு அமைவாக, கடந்த ஓராண்டிற்கும் மேலாக நீதிமன்றத்தில் முன்னிலையாகாது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மண்டதீவு மைதானம் – சட்டம் சுழலும் சிக்கல்

  • Feb 27, 2026 - 08:40 AM
  • 0 Comments

மண்டதீவு தீவில் முன்மொழியப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டமானது, சுற்றுச்சூழல் பரிந்துரைகளை மீறி முன்னெடுக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்திட்டத்தின் எதிர்காலம் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் இறுதித் தீர்மானம் மற்றும் சுற்றுச்சூழல் அறிக்கைகளின் முடிவுகளிலேயே தங்கியுள்ளதாக அந்த மையம் சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின்படி, இவ்வாறான பாரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்யப்பட வேண்டியதுடன், 30 நாட்களுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குவியுது எரிவாயு – குறையுது தட்டுப்பாடு

  • Feb 27, 2026 - 07:40 AM
  • 0 Comments

நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தை விரிவுபடுத்தும் நோக்கில், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்கள் பாரிய அளவிலான எரிவாயு இறக்குமதியினை முன்னெடுத்துள்ளன. லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இன்று நாட்டை வந்தடையவுள்ளது. இந்த புதிய கையிருப்புடன், நடப்பு மாதத்தில் மாத்திரம் இறக்குமதி செய்யப்பட்ட மொத்த எரிவாயுவின் அளவு 28,000 மெட்ரிக் தொன்னைத் தாண்டியுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளை காலை முதல் இந்த எரிவாயு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசியல் பிடியில் மின்சாரம் – அபாயத்தில் தேசியக் கட்டமைப்பு

  • Feb 27, 2026 - 07:33 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் கட்டமைப்பில் நிலவும் தீர்க்கப்படாத சிக்கல்கள் மற்றும் கொள்கை ரீதியான குறைபாடுகள் காரணமாக, தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட மின்சார பொறியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம், நிதி நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் மின் தேவை ஆகியவற்றால் மின் விநியோக வலையமைப்பு தற்போது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக, மின் விநியோகத் திட்டங்கள் மற்றும் துணை மின்நிலையங்களை நவீனப்படுத்தும் பணிகள் […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

மூத்த அரசியல் தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு சிறிதரன் எம்பி அஞ்சலி..!

  • Feb 26, 2026 - 02:29 PM
  • 0 Comments

சென்னை சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணு (வயது 101) உடல்நலக்குறைவால் நேற்று புதன்கிழமை (25.02.2026) காலமானார். இந்நிலையில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவுக்கு அரசியல்வாதிகள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நோர்வே நாடாளுமன்றத்தில் இன்று இலங்கை தொடர்பில் விவாதம்; ஈழப் பெண் முன்வைத்த பிரேரணை

  • Feb 26, 2026 - 01:32 PM
  • 0 Comments

நோர்வே நாடாளுமன்றத்தில் இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து இன்று (26.02.2026) விவாதம் நடைபெறவுள்ளது. நோர்வே தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த இலங்கை தமிழ் பெண்ணான நாடாளுமன்ற உறுப்பினர் கம்சி குணரத்னம் முன்வைத்துள்ள பிரேரணைக்கு அமைவாக இந்த விவாதம் இடம்பெறவுள்ளது. இதன்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளிக்கவுள்ளார். இலங்கையின் உள்நாட்டு மற்றும் சர்வதேச எதிர்பார்ப்புகளை மையமாகக் கொண்டு அமையவுள்ள இந்த விவாதத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனநாயக மாற்றங்கள், […]

செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நள்ளிரவில் கைவரிசை: சிசிடிவி மூலம் சிக்கிய 13, 14, 15 வயது சிறுமிகள்..!

  • Feb 26, 2026 - 01:16 PM
  • 0 Comments

களுத்துறை வெர்னன் பெர்னாண்டோ விளையாட்டு மைதானத்தின் சிற்றுண்டிச்சாலையை உடைத்து டொபி மற்றும் சொக்லேட்களைத் திருடிய மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் 40,000 ரூபாவாகும் என களுத்துறை தெற்கு தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கெமராக்களைப் பரிசோதித்த பின்னர் சிறுமிகள் […]

புதியவை செய்திகள் முக்கிய செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்..!

  • Feb 26, 2026 - 01:14 PM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.   இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.   “இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp