உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 6, 2026 - 09:47 AM
  • 0 Comments

06.04.2026 வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பிக்கு ; நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கை..!

  • Apr 3, 2026 - 10:03 AM
  • 0 Comments

சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

அமெரிக்க இராணுவத்தின் தலைமைத் தளபதி உடனடி ஓய்வு: பென்டகன் உறுதி செய்தது..!

  • Apr 3, 2026 - 09:57 AM
  • 0 Comments

இராணுவத் தலைமைத் தளபதியின் உடனடி ஓய்வை பென்டகன் உறுதி செய்துள்ளது. அமெரிக்க ராணுவத்தின் 41வது தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் ராண்டி ஜார்ஜ், உடனடியாகப் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் என்பதை பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் உறுதிப்படுத்தியுள்ளார்.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பலகோடிரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது..!

  • Apr 3, 2026 - 09:48 AM
  • 0 Comments

பலகோடிரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது..! கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று(02.04.2026) மதியம் தாய்லாந்தின் பேங்கொக் விமானம் மூலம் இந்த போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். அவர் எடுத்து வந்த 4 பயணப் பொதிகளில் இருந்த 16 சைலன்சர்களுக்குள் மிகவும் நுணுக்கமான முறையில் இந்த போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Apr 3, 2026 - 09:43 AM
  • 0 Comments

நாட்டின் பல பகுதிகளில் இன்று (03.04.2026) மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2:00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளது..!

  • Apr 2, 2026 - 02:14 PM
  • 0 Comments

கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான கலடுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார இன்று (02) தெரிவித்தார். வெப்பமான வானிலையுடன் நீரின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். தற்போது நாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலை மற்றும் நீர் நுகர்வு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வறட்சியான இந்தக் காலப்பகுதியில் வெப்பத் தாக்கத்தை தவிர்க்க போதியளவு நீரை அருந்துங்கள்..!

  • Apr 2, 2026 - 01:56 PM
  • 0 Comments

பூநகரிப் பிரதேச மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். முழங்காவில் இரணைமாதாநகர் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தமர்விலேயே அவர் மேற்படி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; தற்போது வறட்சியானதும்- அதிக வெப்பமானதுமான காலநிலை நிலவுவதோடு இது எதிர்வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் வெப்பத்தாக்கம்(Heat Stroke) ஏற்படுவதைத் தடுக்க சுத்தமான நீரை போதியளவு அருந்த வேண்டும். வெப்பத்தாக்கம்(Heat stroke) ஏற்படுவதற்கான அறிகுறிகளாக தீவிர தலைவலி, மயக்கம், வாந்தி, […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் CEO கபில சந்திரசேன மீளவும் விளக்கமறியலில்..!ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் CEO கபில சந்திரசேன மீளவும் விளக்கமறியலில்..!

  • Apr 2, 2026 - 01:50 PM
  • 0 Comments

ஏர்பஸ் விமானக் கொள்வனவின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் கபில சந்திரசேனவின் பிணை கோரிக்கையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கான விசேட காரணங்கள் எவையும் முன்வைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதவான், சந்தேகநபரான கபில சந்திரசேனவை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர் சார்பில் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

வெற்றிலை உண்ணும் பழக்கம் நீண்டகாலம் இருப்பவர்களுக்கு புற்று நோய்க்கு வாய்ப்பு..!

  • Apr 2, 2026 - 01:44 PM
  • 0 Comments

வெற்றிலை உண்ணும் பழக்கம் நீண்டகாலம் இருப்பவர்களுக்கு வாய்ப்புற்றுநோய் மட்டுமன்றி வேறு பல புற்றுநோய்களும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பூநகரி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஜென்சன் றொனால்ட் தெரிவித்துள்ளார். உலக வாய்ச்சுகாதார தினத்தையொட்டி அண்மையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையின் பல்வைத்திய நிபுணர் மற்றும் உத்தியோகத்தர்களுடன் இணைந்து பூநகரிப் பிரதேச சபையினரின் ஒழுங்குபடுத்தலில் பூநகரி சந்தைப்பகுதியில் கடமைபுரியும் தொழிலாளர்களுக்கான கருத்தமர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்படி தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஐந்து இளைஞர்கள் கைது..!

  • Apr 2, 2026 - 01:39 PM
  • 0 Comments

போதை மாத்திரைகளுடன் வவுனியாவில் ஐந்து இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து வவுனியா நகரப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது 5 இளைஞர்களும் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 1500ற்கும் அதிகமான போதை மாத்திரைகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp