உலகம் செய்திகள்

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் இலவச உணவு வழங்கும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 67 பேர் பலி!

  • Dec 24, 2024 - 02:59 AM
  • 0 Comments

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் கடுமையான பஞ்சம் நிலவி வருகிறது. பட்டினியால் மக்கள் குறிப்பாக குழந்தைகள் கடும் சிரமங்களை சந்தித்து வளர்கின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்த வாரம் நைஜீரியாவின் பல்வேறு நகரங்களில் உணவு வழங்கும் நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 67க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஓயோ மாநிலத்தில் கடந்த புதன்கிழமை 35 குழந்தைகள் வரை கொல்லப்பட்டனர். சனிக்கிழமையன்று, தென்கிழக்கு அனம்ப்ரா மாநிலத்தில் 22 பேர் இறந்தனர், தலைநகர் அபுஜாவில் 10 பேர் இறந்தனர், அபுஜாவில் தேவாலயத்தில் […]

இந்தியா செய்திகள்

கட்டாய தேர்ச்சி முறையை இரத்து செய்த மத்திய அரசு!

  • Dec 24, 2024 - 02:42 AM
  • 0 Comments

கல்வி உரிமைச் சட்டம் 2009ன் கீழ் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை தோல்வி அடைய செய்ய கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்நிலையில், மத்திய கல்வித்துறைச் செயலாளர் சஞ்சய் குமார் கூறியதாவது, 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களை ஃபெயில் ஆக்க கூடாது என்கிற கொள்கை ரத்து செய்யப்படுகிறது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இரண்டு மாதங்களுக்குள் மறு தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். அதிலும், மீண்டும் தோல்வி அடைந்தால், அடுத்த […]

இந்தியா செய்திகள்

குவைத்தில் இந்திய வம்சாவளி ஊழியர்களை சந்தித்த பிரதமர் மோடி!

  • Dec 24, 2024 - 02:29 AM
  • 0 Comments

பிரதமர் நரேந்திர மோடி குவைத்திற்கு 2 நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் நேற்று முன் தினம் புறப்பட்டுச் சென்ற அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களையும் ஊழியர்களையும் சந்தித்து அவர் பேசினார். அதன்பின் நேற்று இரவு மீண்டும் அவர் டெல்லி புறப்பட்டார். மோடியுடன் உரையாடிய இந்திய வம்சாவளியினர் மற்றும் தொழிலாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அதில் ஒரு தொழிலாளி, நீங்கள் மருத்துவ விடுமறை […]

உள்ளூர் செய்திகள்

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் வெளிவந்த தகவல்!

  • Dec 24, 2024 - 02:15 AM
  • 0 Comments

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது மல்லியப்பு பகுதியில் வீதியை விட்டு கவிழ்ந்த தனியார் பேரூந்து  நுவரெலியா மாவட்ட மோட்டார் பரிசோதகரால் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன்படி விபத்தில் பேருந்தின் சாரதியின் கதவு பூட்டு இயங்காமையும் திடீரென கதவு திறந்த போது இருக்கையிலிருந்து சாரதி தூக்கி வீசப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஹட்டன் பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் பொறுப்பதிகாரியின் பெறுப்பில் இருந்த பேரூந்தை பிரதான மோட்டார் வாகன பரிசோதகர் பார்வையிட்டார். மேலும், ஓட்டுனர் பாதுகாப்பு […]

உள்ளூர் செய்திகள்

மீண்டும் முல்லைத்தீவுக்கு அனுப்பப்பட்ட மியான்மார் அகதிகள்!

  • Dec 24, 2024 - 02:07 AM
  • 0 Comments

திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த மியன்மார் அகதிகள் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு விமானப்படை முகாமில் தங்க வைப்பதற்காக நேற்று அழைத்துச் செல்லப்பட்டனர். பொலிஸாருக்கு சொந்தமான இரு பேரூந்துகளில் குறித்த அகதிகள் பொலிஸ் பாதுகாப்புடன் நேற்று காலை 7.30 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்கள். மிரிஹானை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதாக கூறப்பட்டிருந்த நிலையில் கேப்பாப்பிலவு முகாமுக்கு குறித்த அகதிகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். கடந்த வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 115 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு கடந்த […]

உள்ளூர் செய்திகள்

வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் – வடக்கு ஆளுநர்!

  • Dec 24, 2024 - 01:58 AM
  • 0 Comments

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் ‘கரைஎழில்’ நூல் வெளியீடும் கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது. இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் […]

உள்ளூர் செய்திகள்

யாழில் டெங்கு காய்ச்சலினால் இதுவரை 91 பேர் பாதிப்பு!

  • Dec 24, 2024 - 01:49 AM
  • 0 Comments

யாழ். மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 91 பேர் டெங்குத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, டெங்குத் தொற்று மிகையாக அதிகரித்து வருகின்றது. இதன்படி, நவம்பர் மாதத்தில் 134 பேரும், டிசம்பர் மாதத்தில் 91 பேரும் டெங்குத் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறச் சூழலை தூய்மையாகப் பேணுவது அவசியம் என அவர் தெரிவித்தார். அதேவேளை கடந்த […]

உள்ளூர் செய்திகள்

ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ரேடார்!

  • Dec 24, 2024 - 01:43 AM
  • 0 Comments

வானிலை மதிப்பீடுகளின் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்தவும் நம்பகமான வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளை செயல்படுத்தவும் இயற்கை பேரழிவுகளால் ஏற்படும் சேதத்தை குறைக்கவும் ஜப்பானின் நிதியுதவியில் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கால் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது. புத்தளத்தில்  நடைபெற்ற டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் கமோஷிதா நவோக்கி கலந்துகொண்டார். வளிமண்டலவியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் […]

கனடா செய்திகள்

விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்ற கனேடிய பெண்!

  • Dec 24, 2024 - 01:29 AM
  • 0 Comments

வின்னிபெகைச் சேர்ந்த ஐரீன் லிமா என்னும் பெண் Dark web என்னும் இணையதளத்திற்கு விற்பனை செய்வதற்காக விலங்குகளை கொடூரமாகக் காலால் மிதித்துக் கொன்று, அதை காணொளியாக பதிவு செய்துவந்துள்ளார். இதற்கு ஐரீனுடைய காதலரான சாட் (Chad Kabecz), உதவியுள்ளார். இந் நிலையில் பொலிசாருக்கு இந்த விடயம் தொடர்பில் ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விலங்குகள் கொடுமை தொடர்பில் அவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு பிணை விடுதலையும் மறுக்கப்பட்டுள்ளது. […]

கனடா செய்திகள்

கனேடிய சுற்றாடல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • Dec 24, 2024 - 01:21 AM
  • 0 Comments

ரொறன்ரோவில் பனிப்பொழிவு தொடர்பில் கனடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக ரொறன்ரோவில் பெரும்பாக பகுதிகளில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் போக்குவரத்து செய்வது தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சில இடங்களில் ஐந்து முதல் பத்து சென்டிமீட்டர் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வீதிகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் எனவும் எனவே சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் பயணங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. மேலும் வாகன சாரதிகள் வீதியை பார்ப்பதில் சிரமங்கள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp