கனடா செய்திகள்

கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது!

  • Dec 28, 2024 - 02:30 AM
  • 0 Comments

கனடாவில் விடுமுறை காலம் ஏதிலிகளுக்கு சவால் மிக்கது என டொரன்டோவின் தற்காலிக இருப்பிட பராமரிப்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரொறன்ரோவில் வீடற்றவர்களின் பிரச்சினை மிக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பண்டிகை மற்றும் விடுமுறை காலத்தில் வீடற்றவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடுவதாகவும் கடும் குளிருடனான காலநிலை அவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தங்குமிட வசதிகள் இல்லாத ஏதிலிகள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதை உணர்வதாக தெரிவிக்கப்படுகிறது. நத்தார் பண்டிகை காலத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வாழ்வது சிரமமானது என தற்காலிக […]

கனடா செய்திகள்

கனேடிய டொலர் தொடர்ச்சியாக வலுவிழப்பதற்கான வாய்ப்பு!

  • Dec 28, 2024 - 02:25 AM
  • 0 Comments

கனேடிய டொலர் தொடர்ச்சியாக வலுவிழந்து செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக பொருளியல் நிபுணர்கள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். எதிர்வரும் சில மாதங்களில் டொலரின் பெறுமதி இவ்வாறு வீழ்ச்சியடையும் என தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க டொலருக்கு நிகரான கனடிய டொலரின் பெறுமதியில் இவ்வாறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது கனடிய டொலரின் பெறுமதி 4 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதையும் படியுங்கள்>மகிந்த அரசாக மாறும் அநுர அரசு https://www.youtube.com/@pathivunews/videos

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு (காணொளி)27.12.2024

  • Dec 28, 2024 - 12:27 AM
  • 0 Comments

இந்திய மீனவர்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்! வெடுக்குநாறி மலையில் ஆதிசிவனை வழிபட வழிசெய்யுங்கள் – ரவிகரன் காணிகளை படையினர் ஆக்கிரமித்திருந்தால் அறியத்தருமாறு காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் கோரிக்கை யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை அதிகரித்துள்ளதா? இந்தியாவை அமைதிகாக்குமாறு கஜேந்திரகுமார் எம்பி கோரிக்கை https://youtu.be/x815qcnAbH4

செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பாவனை அதிகரித்துள்ளதா?

  • Dec 27, 2024 - 10:45 PM
  • 0 Comments

யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் (27) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்

இந்திய மீனவர்களுடன் இனிமேல் பேச்சுவார்த்தை இல்லை – அமைச்சர் சந்திரசேகரன்!

  • Dec 27, 2024 - 10:31 PM
  • 0 Comments

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையே இனிமேல் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறாது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன்; இன்று (27) தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டது. இனி பேச்சுவார்த்தை எதுவும் இல்லை. மீன்பிடி அமைச்சில் இருக்கின்ற அதிகாரிகளும் இந்தியாவில் இருக்கின்ற அதிகாரிகளுக்குமிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்த பேச்சுவார்த்தைகள் தொடரும். அதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பேசப்படுகின்றது. மனிதாபிமான உதவிகளை வாங்குவதோ கொடுப்பதோ தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் […]

செய்திகள்

இந்தியாவை அமைதிகாக்குமாறு கஜேந்திரகுமார் எம்பி கோரிக்கை

  • Dec 27, 2024 - 10:19 PM
  • 0 Comments

13ஆவது திருத்தம் தொடர்பாக இந்தியா இனிமேல் பேசாது விட்டால் பெருமளவுக்கு மகிழ்ச்சியடையக்கூடிய ஒருவராக நானே இருப்பேன் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது திருத்தத்தை பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் இட்ட பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் தமிழ் மக்களின் சார்பிலேயே இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் இந்தியா கைச்சாத்திட்டது என்பது முக்கியமாக […]

செய்திகள்

வெடுக்குநாறி மலையில் ஆதிசிவனை வழிபட வழிசெய்யுங்கள் – ரவிகரன்

  • Dec 27, 2024 - 10:09 PM
  • 0 Comments

வவுனியா வடக்கு – ஒலுமடு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் தமிழ் மக்கள் நிம்மதியான முறையில் வழிபடுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலயத்தின் காணியை வனவளத் திணைக்களத்திடமிருந்து விடுவிக்கவும், ஆலய வளாகத்தில் குழாய்க் கிணறு அமைப்பதற்கான அனுமதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் ரவிகரன் வலியுறுததியுள்ளார். வவுனியா வடக்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று (27) நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். உச்ச நீதிமன்றத் […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்…!

  • Dec 27, 2024 - 09:48 PM
  • 0 Comments

கிளிநொச்சி பூநகரி செல்லையா தீவை பிறப்பிடமாகவும் பூநகரி ஆலங்கேணியை வசிப்பிடமாகவும் கொண்ட சோமலிங்கம் மனோகரன் 26-12-2024 வியாழக்கிழமை அன்று சாவடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற சோமலிங்கம் ரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா மகேஸ்வரி (இந்தியா) தம்பதிகளின் அன்பு மருமகனும் , மதியானந்தம்(இந்தியா) அவர்களின் பெறாமகனும், விஜயகுமாரியின் அன்புக் கணவரும், றதனி (அவுஸ்ரேலியா) ,தர்சிகன் (கனடா) ,றஜாந்தி (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையும், பாஸ்கரன்(அவுஸ்திரேலியா) சர்மிளா (கனடா) ,சபேசன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் , கோசித்,பிரணயா,அன்பகன்,ஆதித்தன்,ஆருத்ரா ஆகியோரின் அன்புப்பேரனும், […]

செய்திகள்

சிவில் நடவடிக்கையில் ஆயுதப்படையினரை ஈடுபடுத்தும் ஜனாதிபதி

  • Dec 27, 2024 - 02:13 PM
  • 0 Comments

நாடு முழுவதும் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

செய்திகள்

மகிந்த அரசாக மாறும் அநுர அரசு

  • Dec 27, 2024 - 01:50 PM
  • 0 Comments

யுத்தத்தில் உயிரிழந்த போர் வீரர்கள் மற்றும் அங்கவீனமுற்ற படைவீரர்களின் குடும்பங்களின் நலன்களை முன்னேற்ற மீளாய்வு கூட்டம் ஒன்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தில் உயிரிழந்த வீரர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்களை அடையாளம் காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலோ அல்லது மாவீரர்களின் குடும்பங்கள் மற்றும் முன்னாண் போராளிகள் தொடர்பில் எவ்வித அக்கரையும் அநுர […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp