சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

  • Jan 11, 2025 - 09:45 PM
  • 0 Comments

கிளிநொச்சி பூநகரியைப் பிறப்பிடமாகவும், யாழ்.கொழும்புத்துறை, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிமியோன் அருளப்பு அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சிமியோன் முத்தம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற மலர்மணி அவர்களின் அன்புக் கணவரும், ஜெனோவா(இலங்கை), அழகுராசா(சிறில்- டென்மார்க்), வனிதா(இலங்கை), றொபின்கூட்(பிரான்ஸ்), டெரன்ஸ்(ஜேர்மனி), யசி(இலங்கை), ஜெஸ்மன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், அந்தோனிப்பிள்ளை(இலங்கை), கிளிவவா(டென்மார்க்),உதய சிங்கம்(இலங்கை), சகிலா(பிரான்ஸ்), சண்சியா(ஜேர்மனி), நிக்சன்(இலங்கை), கினித்தா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு […]

சாவு அறிவித்தல்!

சாவு அறிவித்தல்!

  • Jan 11, 2025 - 09:19 PM
  • 0 Comments

யாழ். ஈச்சமோட்டை கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, Markham , ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் சின்னகுட்டி தியாகராஜா அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சீதப்பிள்ளை தியாகராஜா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் ருக்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,விஜயலட்சுமி(சாந்தா) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தேவேந்திரன், சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், கமலாம்பிகை, இந்திரா, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரஜனிகாந்த், சிரோமினி, நிரோசினி, சுதர்ஷ்சினி, சாளினி, ஐகார்த்தினி […]

முக்கிய செய்திகள்

சிறிதரன் எம்பி வாக்குகளை பெறுவதற்காக துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார் என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் குற்றச்சாட்டு

  • Jan 11, 2025 - 07:04 PM
  • 0 Comments

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிப்பது யார் என்ற சர்ச்சையினால் ஏற்பட்ட அமைதியின்மை சூழ்நிலையை பொலிஸார் தலையிட்டு கட்டுப்படுத்தினர். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்தபோது இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் நினைவேந்தலுக்காக 2016ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் பிரதான சுடரினை ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடரேற்றியதையடுத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிலையில், அங்கு தொடர்ந்து […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில்!

  • Jan 11, 2025 - 03:15 AM
  • 0 Comments

தேசிய தைப்பொங்கல் பண்டிகை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது. புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்,மற்றும் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம் இணைந்து 2025ம் ஆண்டுக்கான தேசிய தைப்பொங்கல் பண்டிகை நடைபெறவுள்ளது. அதன்படி புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவியின் தலைமையில் காலை 7.30 மணிக்கு தெல்லிப்பளை ஸ்ரீ […]

உலகம் செய்திகள்

அமெரிக்க காட்டுத்தீ – பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • Jan 11, 2025 - 01:05 AM
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் உள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ பரவத்தொடங்கியது. பலத்த காற்று காரணமாக காட்டுத்தீ நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. காட்டுத்தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளுக்கும் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழப்பு!

  • Jan 11, 2025 - 12:49 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் மண்ணெண்ணெய் அருந்திய 14 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. கோப்பாய் பகுதியை சேர்ந்த தர்சிகன் சஸ்வின் என்னும் குழந்தையே உயிரிழந்துள்ளது. தாயார் சமையல் வேளையில் ஈடுபட்டிருந்த வேளை, வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் போத்தலை எடுத்து, மண்ணெண்ணெய்யை குழந்தை அருந்தியுள்ளதுடன் அதனை தனது உடலிலும் ஊற்றி விளையாடியுள்ளது. மண்ணெண்ணெய் மனம் வரவே தாய் சென்று பார்த்த போது, உடல் முழுவதும் மண்ணெண்ணெய்யுடன் குழந்தை காணப்பட்டதை அடுத்து, குழந்தையை மீட்டு, கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். அதன்போது குழந்தை உயிரிழந்துள்ளது. இதையும் […]

உள்ளூர் செய்திகள்

உதயங்க வீரதுங்கவுக்கு விளக்கமறியல்!

  • Jan 11, 2025 - 12:43 AM
  • 0 Comments

கைது செய்யப்பட்ட முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கங்கொடவில நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அயல் வீட்டார் உடனான முரண்பாட்டின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டார் கைது செய்யப்பட்ட அவர் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளான நபர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையும் படியுங்கள்>தனஞ்சயவின் சகோதரர் மீது […]

விளையாட்டு

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி தொடருக்கான திகதி அறிவிப்பு!

  • Jan 11, 2025 - 12:35 AM
  • 0 Comments

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்தை பெற்றுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி தொடர்இ எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை மெல்போனில் நடைபெறவுள்ளது. நேற்று இரவு குலுக்கல் முறையில் போட்டிகளுக்கான வீரர்கள் தெரிவாகியுள்ளனர். இதற்கமைய ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் டென்னிஸ் தரவரிசையில் முதலாவதாக உள்ளவருமான இத்தாலியைச் சேர்ந்த ஜனிக் சின்னர்,  34 ஆவது இடத்தில் உள்ள சிலியை சேர்ந்த நிக்கோலஸ் ஜாரியை  எதிர்கொள்ளவுள்ளார். ஜானிக் சின்னர், கடந்த வருட […]

உலகம் முக்கிய செய்திகள்

ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கிலிருந்து டொனால்ட் டிரம்ப் விடுவிப்பு!

  • Jan 11, 2025 - 12:25 AM
  • 0 Comments

ஆபாச நடிகைக்கு பணம் அளித்த வழக்கில் இருந்து அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளார். 2016 ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நடிகைக்கு முறைகேடாக பணம் அளித்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்றம் நேற்று (10) தண்டனை விவரங்களை வெளியிடுவதாக தெரிவித்திருந்தது. அமெரிக்க ஜனாதிபதி; தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் 10 நாள்களில் பதவியேற்க உள்ள நிலையில், ஆபாசப் பட நடிகைக்குப் பணம் கொடுத்த வழக்கில் டிரம்பின் தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக இருந்தது. அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டு […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தனஞ்சயவின் சகோதரர் மீது கொலைவெறித் தாக்குதல்!

  • Jan 11, 2025 - 12:16 AM
  • 0 Comments

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் சகோதரர் சாவித்ர சில்வா மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் நேற்று (10) இரவு 7.30 மணியளவில் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலை, பாதாள உலகத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ரத்மலானே சுத்தா என்று அழைக்கப்படும் இந்திக சுரங்க சொய்சா மேலும் சிலருடன் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சாவித்ர சில்வா, மொரட்டுவை லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த சாவித்ர சில்வாவின், நிலைமை மோசமாக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp