செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைத்து குற்றவாளிகளை தப்பவிட்ட பொலிஸார்

  • Jan 18, 2025 - 03:33 PM
  • 0 Comments

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகாளை கேடைமடு வயல்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (17) பொலிஸார் சுற்றிவளைத்தனர் வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டது இதன்போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து தப்பியோடினர் சந்தேக நபர்களை கலைத்து பிடிக்க முடியாத பொலிஸார் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 14 பெரல் கோடாவை மடடுமே கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

கிளிநொச்சியின் உடனடி தேவையென சில விடங்களை குறிப்பிட்டு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

  • Jan 18, 2025 - 03:21 PM
  • 0 Comments

கிளிநொச்சி மாவட்டத்தில் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தித் தருமாறு தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.ஸ்டீவென்சன் இக்கடிதத்தை அனுப்பிய பின்னர் ஊடகங்களுக்கு அதனை வெளியிட்டுள்ளார். அக் கடிதத்தில் இவ்வாறு உள்ளது கிளிநொச்சி மாவட்டம் யுத்தத்தினால் நலிவடைந்து வளர்ந்துவரும் மாவட்டம் என்பது தாங்கள் அறிந்ததே. இம்மாவட்டத்தின் நகர அபிவிருத்தியில் உடனடியாக செய்து கொடுக்கவேண்டிய விடயங்களை தங்களிடம் முன்வைக்கிறோம். 1. கிளிநொச்சியில் பரந்தன் சந்தி, டிப்போ சந்தி, கரடிபோக்கு […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு எதிராக கிளர்ந்தெழுந்த பாரம்பரிய விவசாயிகள்

  • Jan 18, 2025 - 03:07 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை செய்வதற்கான திகதி தீர்மானிக்கப்பட்ட நிலையில் குறித்த திகதிக்கு முன்னர் முதலாளித்துவ வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு சில செல்வந்த விவசாயிகளுக்கு நெல் அறுவடை செய்ய அரசாங்க அதிபர் அனுமதி வழங்கியதால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் அரசாங்க அதிபரின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாட்டை கண்டித்து விவசாயிகள் ,அவருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் நேற்று (17) முறைப்பாடு செய்துள்ளனர். மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு காரியாலத்திற்கு சில விவசாயிகள் […]

முக்கிய செய்திகள்

யாழ் வந்த சந்தோஸ்ஜா யாழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தார்

  • Jan 18, 2025 - 02:51 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ்ஜா அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் யாழ்ப்பாண நகரில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு (17) இரவு விருந்துடன் இச்சந்திப்பு இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கருணநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சிறீபவானந்தராஜா முதலானோர் கலந்துகொண்டனர். யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் இதில் கலந்துக்கொள்ளவில்லை. […]

முக்கிய செய்திகள்

10 மாத சேயை தண்ணீரில் அமிழ்த்தி கொன்ற தாய்

  • Jan 18, 2025 - 10:01 AM
  • 0 Comments

அனுராதபுரம் ஹபரணை பொலிஸ் பிரிவின் பலுகஸ்வௌ பகுதியில்; நேற்று முன்தினம் இரவு குழந்தையொன்று ஒ இறந்ததாக ஹபரண பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (17) அறிவிக்கப்பட்டுள்ளது. புலனகம, பலுகஸ்வௌ பகுதியைச் சேர்ந்த 10 மாத ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இது ஒரு கொலை என்பது தெரியவந்துள்ளது. இந்தக் குற்றச் செயல் தொடர்பாக உயிரிழந்த குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று குழந்தையின் தந்தை வீட்டில் இல்லாத நிலையில் குழந்தையை வீட்டிற்கு பின்னால் […]

சினிமா

வெறியான நடிகை சமந்தா

  • Jan 18, 2025 - 07:32 AM
  • 0 Comments

நடிகை சமந்தா மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்த சூழலில் அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதன் காரணமாக அவர் உடல் எடை குறைந்து ஒல்லியாகி இருந்தது இதனை பலரும் விமர்சனம் செய்திருந்தனர் இதனால் அவரது உடலைப் பற்றி பலரும் கேலி செய்தனர் இதனால் கடும் கோபமுற்ற அவர் அவ்வாறு செய்தவர்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்து இருந்தார். அதாவது அவர்  anti-inflammatory    டயட் சாப்பிடுவதாகவும். அதனால் உடல் எடை ஏறாது என்றும், மயோசிட்டிஸ் பிரச்சனைக்கு […]

உலகம் செய்திகள்

2025 ம் ஆண்டு பாபா வங்காவின் கணிப்புக்கள் சில

  • Jan 18, 2025 - 07:16 AM
  • 0 Comments

பிறந்திருக்கும் புத்தாண்டு எப்படி அமையப்போகின்றது என எதிர்பார்ப்பு நமக்குள் இருக்கும். கடந்த 2024 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த மோசமான சம்பவங்கள் இந்த ஆண்டும் வரக்கூடாது என்று பலரும் பிராத்தணை செய்திருப்போம். தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது. பாபா வாங்கா கணித்தவை 1. பிறந்திருக்கும் புத்தாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் பெரும் மோதல் வெடிக்கும், உலக நாடுகளின் பொருளாதார பாதிக்கப்படும், […]

செய்திகள்

கையிருக்க கரண்டியில் சாப்பிடுபவரா நீங்கள்? உங்களுக்கு தான் இது

  • Jan 18, 2025 - 06:56 AM
  • 0 Comments

கையால் சாப்பிடுவதில் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அப்படியிருக்க, கரண்டியை பயன்படுத்தி உணவு சாப்பிடுவது இன்றைக்கு ஒரு நாகரீகமாக மாறிவிட்டது. பிடிக்கிறதோ, இல்லையோ கரண்டியில் சாப்பிடுவதுதான் நாகரிகம் என்றாகிவிட்டது. அதிலிருந்து மாறுபட்டு, கையால் சாப்பிடுவதால் சில நன்மைகளும் இருக்கின்றன. உணவைத் தொட்டவுடன் அது சூடாக இருக்கிறதா?, குளிர்ச்சியாக இருக்கிறதா?, திட நிலையில் இருக்கிறதா?, திரவ நிலையில் இருக்கிறதா..? என்று எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். அந்தத் தகவல் உடனடியாக மூளைக்குப் போகிறது. நாம் சாப்பிடப் போகிறோம் என்பதை மூளை […]

உலகம் புதியவை வினோத உலகம்

சீதனம் கொடுத்து திருமணம் செய்த மாப்பிள்ளை

  • Jan 18, 2025 - 06:30 AM
  • 0 Comments

நைஜீரிய நாட்டில் ஆண்கள் தான் பெண்களுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்வது வழக்கம் என்பதனை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து வாசியுங்கள். நைஜீரிய நாட்டின் பேயெல்சோ மாநிலத்தை சேர்ந்த இளைஞன் டேவிட் என்பவர் டேவிட் அவரது நிச்சயதார்த்த விழாவுக்கு நைஜீரிய நாட்டின் மற்றொரு மாநிலமான ஐமோ மாநிலத்துக்கு சென்றான். உணவு மற்றும் பாட்டு கோஸ்ட்டி செலவு உட்பட திருமண செலவாக மாப்பிள்ளையிடம் 45 லட்சம் ரூபா வாங்கப்பட்டு இருந்தது கொடுக்கவேண்டிய சீதனமாக 3 லட்சம் நிச்சயிக்கபட்டு இருந்தது. கல்யாணத்துக்கு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp