முக்கிய செய்திகள்

கொழும்பில் துப்பாகி சூடு நடத்தி கசிப்பை பிடித்த பொலிஸார்

  • Jan 24, 2025 - 08:44 AM
  • 0 Comments

கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது. அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி காரொன்று பயணித்துள்ளது அதனையடுத்து வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற பொலிஸார் மாளிகாவத்தை பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உலகம் வினோத உலகம்

சில மிருகங்களினது எச்சங்கள் அல்லது கழிவு மிகவும் பெறுமதியானது

  • Jan 24, 2025 - 07:58 AM
  • 0 Comments

திமிலங்கிலத்தின் எச்சம் அம்பர் என அழைக்கப்படுகின்றது. ஒரு கிலோ அம்பர் 3 கோடி வரை விலை போகக்கூடியது. இது மருத்துவ பயன்பாட்டிற்கும் வாசனை திரவியமாகவும் பயன்படுகிறது. பூனைகளின் மலத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றது லூவா கோப்பி கொட்டைகள். இந்த காப்பிக் கொட்டைகளின் விலை ஒரு கிலோ 75,000 ரூபாய். யானையின் லத்தியிலிருந்து தயாரிக்கப்படும் பிளாக் ஐவரி கோப்பி என்கின்ற கோப்பி மிகவும் விலை உயர்ந்ததாகும் புனுகு பூனை என ஒருவகை பூனையுண்டு அதன் விந்திலிருந்து வாசனை திரவியம் உற்பத்தி […]

முக்கிய செய்திகள்

பெண்களிடமிருந்து கைப்பேசியை பறித்த இளைஞர்கள் வவுனியாவில் சம்பவம்

  • Jan 24, 2025 - 07:00 AM
  • 0 Comments

வவுனியா – ஓமந்தை பகுதியில் நேற்று (23) முற்பகல் பெண்களை வழிமறித்து அவர்களை தாக்கியதுடன் அவர்களின் கைபேசியை பறித்துச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா – ஓமந்தை யு9 வீதியில் நேற்று (23) முற்பகல் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு ரு பெண்களை தொடர்ந்து வந்த இளைஞர்கள் இருவர் குறித்த பெண்களை வழிமறித்து பெண்களை தாக்கியதுடன் அவர்களிடமிருந்து கைபேசியை பறிமுதல் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் உடனடியாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அவசர […]

முக்கிய செய்திகள்

வடக்கில் சிறிய அளவிலும் அம்பாறை , மட்டக்களப்பில் இடைக்கிடையும் மழை பெய்யும் சாத்தியம்

  • Jan 24, 2025 - 06:40 AM
  • 0 Comments

ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளார் இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய […]

இந்தியா

த.வெ.கழகத்தின் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கையென புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

  • Jan 24, 2025 - 05:48 AM
  • 0 Comments

கட்சி பொறுப்புகளுக்கு பணம் வாங்குவதாகவும், விழுப்புரம் மாவட்டத்தில் நகர செயலாளர் பதவிக்கு 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் குரல் பதிவு பரவியது. அத்துடன் பணம் இருந்தால்தான் த.வெ கழகத்தில் பதவி தரப்படுவதாக தொண்டர்கள், நிர்வாகிகள் பேசக்கூடிய குரல்பதிவுகள் தவெக குழுக்களில் பகிரப்பட்டு வந்தது. இந்நிலையில், பனையூரில் தவெக சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிகளுக்கு பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் […]

இந்தியா

கெஜ்ரிவாலின் உயிருடன் விளையாடுகிறீர்களா?: என அமித்ஸா மற்றும் மோடியிடம் கேள்வியெழுப்பியுள்ள அதிஸி

  • Jan 24, 2025 - 05:40 AM
  • 0 Comments

டெல்லி சட்டசபை தேர்தல் திர்வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார். கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் முறைப்பாடு செய்துள்ளனர் இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்பப் பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு […]

முக்கிய செய்திகள்

ஸ்தரமான எதிர்கட்சிக்காக ரணில், சஜித் தரப்புக்களின் இணைவு சாத்தியம்

  • Jan 24, 2025 - 05:28 AM
  • 0 Comments

ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்குமிடையிலான பேச்சுவார்த்தையொன்று அண்மையில் நடைப்பபெற்றுள்ளது. இரு கட்சிகளினதும் பொதுச் செயலாளர்களுக்கிடையிலான இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு அண்மையில் அங்கீகாரம் வழங்கியிருந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி அது குறித்த பேச்சுவார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. அத்தோடு கடந்த 20ஆம் திகதி ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது இந்நிலையிலேயே இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை […]

முக்கிய செய்திகள்

துப்பாக்கி சூட்டிற்கு நானும் இலக்காக்கப்படலாம் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

  • Jan 24, 2025 - 05:16 AM
  • 0 Comments

மன்னாரில் நீதிமன்றத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதற்கு பாதுகாப்பு தரப்பினரின் அசமந்த போக்கே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நேற்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, அரசாங்கத்தின் தூய்மையான இலங்கை என்ற திட்டத்தை நாங்கள் வரவேற்கிறோம். இந்த திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை. முன்னாள் ஜனாதிபதி இல்லம் தொடர்பான தீர்மானம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைக்க நடவடிக்கை […]

முக்கிய செய்திகள்

நாடாளுமன்ற எம்பிகளுக்கான உணவு விலையை 450 இருந்து 2000 ரூபாவாக உயர்த்த தீர்மானம்

  • Jan 24, 2025 - 04:59 AM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விலை திருத்தத்தின்படி, எம்.பியொருவரின் காலை உணவிற்கு 600 ரூபாவும், மதிய உணவிற்கு 1300 ரூபாவும், மாலை தேநீருக்கு 100 ரூபாவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பராமரிப்புக் குழுவின் உறுப்பினரான பிரதி அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு செயற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னய […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

தொடர்ச்சியாக வெள்ளத்தினால் பாதிப்படையும் கிளிநொச்சி மக்கள்!

  • Jan 24, 2025 - 03:31 AM
  • 0 Comments

கிளிநொச்சி மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அதன்படி இரணைமடுக் குளத்தின் வான் கதவுகள் மூன்றாவது முறையாகவும் திறக்கப்பட்டதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் ஜயன் கோயிலடி, ஊரியான், பெரியகுளம் கண்டாவளை உள்ளிட்ட பகுதிகளில் வயல் நிலங்களுக்கும் அழிவினை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளப் பாதிப்பு காரணமாக குளங்களில் நீர்மட்டம் அதிகரித்தமையால் முதலைகளும் மக்கள் குடியிருப்புபகுதிகளுக்குள் புகுந்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் மேலும் வட்டக்கச்சி, பெரியகுளம் பகுதியில் இருந்து புளியம்பொக்கனை செல்லும் பிரதான வீதியில் வெள்ளம் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp