இந்தியா

கெஜ்ரிவாலின் உயிருடன் விளையாடுகிறீர்களா?: என அமித்ஸா மற்றும் மோடியிடம் கேள்வியெழுப்பியுள்ள அதிஸி

டெல்லி சட்டசபை தேர்தல் திர்வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு வருகிறார்.

கெஜ்ரிவாலுக்கு பஞ்சாப் மாநில போலீசார் வழங்கும் பாதுகாப்பை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் டெல்லி போலீசார் முறைப்பாடு செய்துள்ளனர்

இதையடுத்து, கெஜ்ரிவாலுக்கு வழங்கி வந்த பாதுகாப்பை பஞ்சாப் மாநில போலீஸ் திரும்பப் பெற்றது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
விமானி, பாதுகாப்பு அணிகள், நெருங்கிய பாதுகாப்பு ஸ்டாப் உள்பட 63 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடன் மத்திய ஆயுத போலீஸ் படையினர் 15 பேரும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் போலீசார் அளித்த பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு டெல்லி முதல் மந்திரி அதிஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது