இந்தியா

தமிழகத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் 33 பேர் கைது – இலங்கை கடற்படை அராஜகம்

  • Jan 26, 2025 - 07:32 AM
  • 0 Comments

தமிழக மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளனர். தனுஸ்கோடி மற்றும் தலைமன்னார் கடற்ப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை செய்தது. அத்துடன் மீனவர்களின் மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது.  

சினிமா விளையாட்டு

நடிகரும் கார் பந்தைய வீரருமான அஜித்குமாருக்கு பத்ம பூசண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

  • Jan 26, 2025 - 07:21 AM
  • 0 Comments

இந்தியாவின் குடிமக்களுக்கான உயரிய விருதுகளாக உள்ள பத்மபூசன் விருது நடிகர் அஜித்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பத்ம பூசண் விருது அறிவித்ததற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு தன்னுடைய மனப்பூர்வ நன்றியை தல தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அஜித்குமார் வெளியிட்ட எக்ஸ் வலைதள செய்தியில், இந்திய ஜனாதிபதியிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன். இந்த மதிப்புமிகு கவுரவத்திற்காக நான், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு என்னுடைய […]

உலகம்

சூடான் மீதான தாக்குதலில் 67 பேர், கொல்லப்பட்டனர்.

  • Jan 26, 2025 - 07:09 AM
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடைப்பெற்று வருகிறது. அதனை எதிர்த்து துணை ராணுவத்தினர் போராடி வருகிறார்கள். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த உள்நாட்டுக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள அதே வேளை பல்லாயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர் இந்நிலையில், சூடானின் டார்பூர் பகுதியில் உள்ள எல்-பஷாரில் செயல்பட்டு வந்த மருத்துவமனை ஒன்றில் ஆளில்லா விமானம் நேற்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 67 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான அதேவேளை […]

முக்கிய செய்திகள்

ஏப்ரல் மாதத்திற்கிடையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தப்படும்- தேர்தல்கள் ஆணைக்குழு

  • Jan 26, 2025 - 06:54 AM
  • 0 Comments

நீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாகக் வைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் தீர்மானிக்க முடியும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது எவ்வாறிருப்பினும் ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2023ஆம் ஆண்டு கோரப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்து 2024ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்புக்கமைய புதிய வேட்புமனுவை கோருவதற்கான திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீதிமன்றத்தில் […]

முக்கிய செய்திகள்

இராஜபக்ஸக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தீவிரமடைந்தால் நாங்கள் அச்சமடைய போவதில்லையென நாமல் தெரிவித்துள்ளார்

  • Jan 26, 2025 - 06:29 AM
  • 0 Comments

அரசியல் கட்டளைகளை கடினமான முறையில் செயற்படுத்தும் பொலிஸார் பாதாளக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபகஸ தெரிவித்தார். குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட தமது சகோதரரான யோசித்த ராஜபக்ஸவை நேற்று (25) குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு சென்று சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேலுள்ளவாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது தம்பியை தங்காலையில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பாக அழைத்து […]

முக்கிய செய்திகள்

புலிகளின் மீள செயற்படும் சாத்தியமிருப்பின நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறு மஹிந்தவிடம் அரசாங்கம் வலியுறுத்தல்

  • Jan 26, 2025 - 06:08 AM
  • 0 Comments

மீளப் பெறப்பட்ட தனது பாதுகாப்பு பிரிவை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனு குறித்த வழக்கு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அரசாங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது மீண்டும் விடுதலைப் புலிகளின் ஒன்று கூடி எழுச்சி பெறுவது தொடர்பான தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி வசம் இருக்குமாயின் அவற்றை நீதிமன்றத்தின் ஊடாக நாட்டுக்கு வெளிப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 2வது நாளாக தொடர்கின்றது

  • Jan 25, 2025 - 06:49 PM
  • 0 Comments

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது மாணவர்கள் 9 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடைகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கடந்த மே மாதம் விஞ்ஞான பீட மாணவர்களின் கற்றல் மண்டபத்தில் மாணவர்கள் கற்றல் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது மாணவர்களை மண்டபத்தினுள் வைத்து விரிவுரையாளர் ஒருவர் பூட்டிய வேளை விஞ்ஞான பீட மாணவர் […]

முக்கிய செய்திகள்

மகிந்தவின் 2 வது புத்தாவுக்கு 27 ம் திகதி வரை விளக்கமறியல்

  • Jan 25, 2025 - 06:27 PM
  • 0 Comments

யோசித ராஜபக்ஸவை புதுக்கடை இலக்கம் 5 மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் நீதவான் உத்தரவிட்டார். பணமோசடி சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகனான யோசித ராஜபக்ஸ இன்று (25) காலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் கைது செய்யப்பட்டார். ரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பாக யோசித […]

முக்கிய செய்திகள்

தனியார் துறையினரின் 4,000 மெட்ரிக் தொன் அரிசி சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

  • Jan 25, 2025 - 06:15 PM
  • 0 Comments

தனியார் துறையால் இறக்குமதி செய்யப்பட்ட 4,000 மெட்ரிக் தொன் அரிசி இதுவரை விடுவிக்கப்படாமல் உள்ளது அரசாங்கம் அரிசி இறக்குமதி செய்வதற்கு வழங்கிய காலம் முடிவடைந்ததால், குறித்த அரிசி கையிருப்பு இன்னும் சுங்கத்தில் இருப்பதாக சுங்க ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட தெரிவித்தார். நாட்டில் அரிசி பற்றாக்குறைக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்ய அரச வணிக கூட்டுத்தாபனத்திற்கும் தனியார் துறைக்கும் அனுமதி வழங்கியிருந்தது. இறக்குமதிக்கான காலக்கெடு கடந்த 10 ஆம் திகதியுடன் முடிவடைந்தது. […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp