முக்கிய செய்திகள்

இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடைபெற்றது

  • Jan 26, 2025 - 05:51 PM
  • 0 Comments

இந்தியாவின் 76ஆவது குடியரசு தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் மருதடி பகுதியில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இருவர் உயிரிழப்பு

  • Jan 26, 2025 - 04:36 PM
  • 0 Comments

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் – புலிபாய்ந்த கல் வீதியை குறுக்கறுத்துச் சென்ற வெள்ள நீரில் நேற்று (25) இழுத்து செல்லப்பட்டு காணாமல்போன இருவரும் இன்று (26) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் மட்டக்களப்பு, வாழைச்சேனை சந்திவெளி பகுதியைச் சேர்ந்த 71, மற்றும் 52 வயதுதுடைய உடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இருவரது சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.    

முக்கிய செய்திகள்

சீ.ஐ.டி மற்றும் பொலிஸாரின் விசாரணைகளில் அரசு தலையிடாதென ஜனாதிபதி தெரிவிப்பு

  • Jan 26, 2025 - 10:53 AM
  • 0 Comments

யாதொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாத போதும் விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை மட்டுமே எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது கடந்த 9 வருடங்களாக மறைக்கப்பட்டிருந்த கோவைகள் தூசி தட்டி திறக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாப தெரிவித்துள்ளார் அரசாங்கம் எந்தவொரு நபர்களையோ, வழக்குகளையோ தெரிவு செய்வதில்லையெனவும் உரிய வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மாத்திரமே சட்ட […]

முக்கிய செய்திகள்

சீனா வசமாகும் ஜேவிபி, அதன் மூத்த தலைவர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம்

  • Jan 26, 2025 - 10:34 AM
  • 0 Comments

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) இடையிலான அரசியல் ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்காக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் இந்த விஜயத்திற்கான திகதி இன்னும் நிறைவுப்படுத்தப்படாத நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாத்திற்கு முன்னர் இந்த விஜயம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது 15 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது ஆயினும இவ் ஒப்பந்தங்களில் இரண்டு பற்றி மட்டுமே அரசாங்கம் தகவல்களை […]

முக்கிய செய்திகள்

டொனால்ட் டிரம்ப் அதிரடி இலங்கைக்கு அமெரிக்கா  வழங்கிய உதவிகள் நிறுத்தம்

  • Jan 26, 2025 - 10:05 AM
  • 0 Comments

அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவைப்பதற்கும் எதிர்காலத்தில் வெளிநாட்டு உதவிகளை அரைவாசியாக குறைப்பதற்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார் புதிய ஜனாதிபதியின் அதிரடி முடிவால் இலங்கை உட்பட பல நாடுகள் நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளர் மைக்ரூபியோ இதுகுறித்த அறிவிப்பை அமெரிக்காவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பிவைத்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு வெளியே பல நாடுகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி தி;ட்டங்களிற்கு யுஎஸ்எயிட் அமைப்பும் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் வழங்கிவந்த நிதி நிறுத்தப்படும் நிலை […]

முக்கிய செய்திகள்

வடகிழக்கு மாகாணங்கள் சீரற்ற வானிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது

  • Jan 26, 2025 - 09:45 AM
  • 0 Comments

கடந்த 13ஆம் திகதி தொடக்கம் நிலவும் மோசமான வானிலையால் இதுவரை 27,751 குடும்பங்களைச் சேர்ந்த 92,471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் மோசமான வானிலையானது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அண்மைய நாட்களில் தொடர் மழையால் கிழக்கு மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டதுடன், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 17,952 குடும்பங்களைச் சேர்ந்த 56,878 பேர் பாதிக்கப்பட்டனர். அத்துடன் வட மாகாணத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா […]

விளையாட்டு

திலக் வர்மாவின் நிதானமான ஆனால் வேகமான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது

  • Jan 26, 2025 - 08:48 AM
  • 0 Comments

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி சென்னையில் நடைபெற்றது. நூணய சுழற்சியில் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் பட்லர் அதிரடியாக விளையாடி 45 ஓட்டங்கள் பெற்ற போது ஆட்டமிழந்தார் இறுதி கட்டத்தில் பிரைடன் கார்ஸ் அதிரடியாக ஆடி 17 பந்தில் 31 ஓட்டங்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி […]

விளையாட்டு

உலகின் முதல்தர வீராங்கனைகளை வீழ்த்திய முதல் வீராங்கனையானார் அமெரிக்க மேடிசன் கீஸ்

  • Jan 26, 2025 - 08:23 AM
  • 0 Comments

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், மற்றும் பெலாரசஸ் நாட்டின் அரினா சபலென்கா மோதினர். இதில் சபலென்காவை வீழ்த்திய மேடிசன் கீஸ் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் இந்நிலையில், இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ் உலகின் முதல்தர வீராங்கனையான அரினா சபலென்காவை வீழ்த்தினார். அரையிறுதிப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தியே […]

முக்கிய செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தனித்தும், கூட்டாகவும் போட்டியிடும்

  • Jan 26, 2025 - 07:56 AM
  • 0 Comments

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் பல இடங்களில் தனித்தும், சில இடங்களில் கூட்டாகவும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் சம்பந்தமாக கட்சியின் தலைவரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெப்ரவரிக்குப் பின்னர் கோரப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். அந்த வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொழும்பு, கண்டி, மற்றும் கிழக்கு மாகாணம் உள்ளிட்ட […]

இந்தியா

தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக ஆளுநர் சித்தரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் வெளியிட்டுள்ளது

  • Jan 26, 2025 - 07:45 AM
  • 0 Comments

குடியரசு தின விழா வாழ்த்து செய்தியில் தமிழக அரசை கடுமையாக விமர்சித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை விமர்சிக்க குடியரசு தினத்தை அரசியல் கேடயமாக்குவது மிகவும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்தில் கவர்னரின் செயல்பாடு, அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை, கவர்னரின் தேநீர் விருந்து புறக்கணிப்பு என தனக்கு எதிராக செய்திகள் வந்து […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp