சுவிஸில் பேருந்து தீ விபத்தில் யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு..!
சுவிட்சர்லாந்தில் பேருந்தில் தீ பரவி ஏற்பட்ட விபத்தில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த விடயத்தை, உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள், சூரியன் செய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தினர். விபத்தில் உயிரிழந்த 5 பேரில், யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட, 30 வயதான இளைஞனும் அடங்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்து ஜனாதிபதி, உயிரிழந்தவர்களுக்கான இறுதி அஞ்சலியைச் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம், விபத்தா, அல்லது பயங்கரவாத தாக்குதலா என்பது தொடர்பில் விசாரணைகள் […]









