முக்கிய செய்திகள் புதியவை

வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் பெருமளவான போதைப்பொருள் தீயிட்டு அழிப்பு..!

  • Mar 13, 2026 - 12:48 PM
  • 0 Comments

கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் பலபிட்டிய நீதவான் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோகிராம் போதைப்பொருட்கள், இன்று (13.3.2026) வனாத்தவில்லுவ லக்டோவத்தயில் வைத்து அழிக்கப்பட்டன. அத்துடன், அரச இரசாயன பகுப்பாய்வாளர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,500 வழக்குகளுக்குரிய சான்றுப் பொருட்களும் இதன்போது அழிக்கப்பட்டுள்ளன. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குகள் நிறைவடைந்த போதைப்பொருட்கள் மற்றும் போதை மாத்திரைகள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று அதிகாலை நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டன. […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும்..!

  • Mar 13, 2026 - 12:37 PM
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை புனித தீர்த்தக்கரையின் புனிதத்தன்மை முழுமையாகப் பேணப்பட்டுப் பாதுகாக்கப்படும் அதேவேளையில், அப்பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். கீரிமலை புனித தீர்த்தக்கரையில் அமைந்துள்ள ‘தண்டிகை கனகநாயக முதலியார் மட ஆதனம்’ வலிகாமம் வடக்கு பிரதேச சபையிடம் 100 ஆண்டுகளுக்கு குத்தகையின் அடிப்படையில் கையளிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (13.03.2026) காலை நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் […]

முக்கிய செய்திகள் புதியவை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திரவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு..!

  • Mar 13, 2026 - 12:14 PM
  • 0 Comments

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக இன்று (13.03.2026) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிணையில் உள்ள ஷசீந்திர ராஜபக்ச உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன்போது, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றில் […]

இந்தியா புதியவை முக்கிய செய்திகள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு எரிபொருள்..?

  • Mar 13, 2026 - 12:13 PM
  • 0 Comments

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியா உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தமிழர் பகுதியில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைக்கு தடை ; பல வணிக நிலையங்கள் முற்றுகை..!

  • Mar 13, 2026 - 12:04 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை முற்றுகையிட்ட பொலிஸார், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று (12.03.2026) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். […]

உலகம் புதியவை முக்கிய செய்திகள்

உச்சமடையும் போர்; விழுந்து நொருங்கிய அமெரிக்காவின் போர் விமானம்..!

  • Mar 13, 2026 - 11:41 AM
  • 0 Comments

ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்காவின் KC-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் விபத்துக்குள்ளாகியதில், கீழே விழுந்து நொறுங்கியது. இதன்மூலம், இந்தப் போரில் அமெரிக்கா 4வது விமானத்தை இழந்துள்ளது. ஈராக்கின் மேற்கு பகுதியில் கே.சி.-135 ரக வான்வழி எரிபொருள் நிரப்பும் விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மற்றொரு விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மேற்கு ஈராக்கில் ஒரு […]

முக்கிய செய்திகள் புதியவை

இலங்கைக்கு 6 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை..!

  • Mar 13, 2026 - 11:31 AM
  • 0 Comments

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 600,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தம் 623,651 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 115,772 பயணிகள் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். பிரித்தானியாவில் இருந்து 66,164 […]

புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

மாமியாரை படுகொலை செய்த தனது மகனுக்கு உதவிய தந்தையும் கைது..!

  • Mar 13, 2026 - 11:10 AM
  • 0 Comments

மாமியாரை படுகொலை செய்து , மாமனாருக்கு படுகாயங்களை விளைவித்த தனது மகனுக்கு உதவிய குற்றச்சாட்டில் தந்தையும் பொலிஸார் கைது செய்த நிலையில் , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கரவெட்டி பகுதியை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்று முன்தினம் புதன்கிழமை தனது மனைவியின் தாயாரை வெட்டி படுகொலை செய்ததுடன் , மனைவியின் தந்தையை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி கடும் காயங்களை விளைவித்த குற்றச்சாட்டில் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். […]

முக்கிய செய்திகள் புதியவை

ஜனாதிபதியின் கடமைகளை ‘அதிகாரபூர்வமானவை’, ‘தனிப்பட்டவை’ என வகைப்படுத்த முடியாது..!

  • Mar 13, 2026 - 11:08 AM
  • 0 Comments

ஜனாதிபதி ஒருவரின் கடமைகளை ‘அதிகாரபூர்வமானவை’ மற்றும் ‘தனிப்பட்டவை’ என வகைப்படுத்த முடியாது எனவும், அவர் பதவி வகிக்கும் காலம் முழுவதும் 24 மணிநேரமும் ஜனாதிபதியாகவே கருதப்படுவார் எனவும் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், ஜனாதிபதி ஒருவரின் பணிகள் மற்றும் அவரது தனிப்பட்ட செயல்பாடுகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதா என்பது குறித்து இன்று நாட்டில் ஒரு விவாதம் எழுந்துள்ளது. இது முற்றிலும் ஒரு மாயையாகும். அத்தகைய […]

முக்கிய செய்திகள் புதியவை

சுரேஷ் சலே மீது பாரிய குற்றச்சாட்டுகள் – 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு..!

  • Mar 13, 2026 - 11:06 AM
  • 0 Comments

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இது தொடர்பான 25 பக்கங்கள் கொண்ட விரிவான விசாரணை அறிக்கை நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் முன்வைத்துள்ள பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு:- 1. விசாரணைகளை தவறாக வழிநடத்தியமை மட்டக்களப்பு – வவுணதீவு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp