முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள் புதியவை

தேயிலை பையில் ஹெரோயின் கடத்தல்..!

  • Mar 17, 2026 - 10:34 AM
  • 0 Comments

சந்தேக நபருக்கு 72 மணித்தியாலம் தடுப்புக்காவல் உத்தரவு ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரை 72 மணித்தியாலம் (3 நாட்கள் ) தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கானது திங்கட்கிழமை(16.03.2026) கல்முனை நீதிமன்ற நீதிவான் கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை எதிர்வரும் மார்ச் மாதம் (19) ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். செய்திப் பின்னணி அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ரில்வின் சில்வா குறிப்பிடும் மாகாண சபை ”முறைமை” என்பது மாகாண சபை ”தேர்தல்” என்பதல்ல..!

  • Mar 17, 2026 - 09:41 AM
  • 0 Comments

மாகாண சபைகள் அமைப்பு ஜே.வி.பி.யின் தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தவைகளை முழுமையாக நிறைவேற்ற உதவவில்லையென்று குற்றஞ்சாட்டியுள்ள இதன் செயலர் ரில்வின் சில்வா, இதற்கான மாற்றீட்டைத் தேடும்வரை மாகாண சபைகள் முறைமை அவ்வாறே இருக்குமென சுட்டியிருப்பது ஆளுனர்களின் நிர்வாகத்தையே தவிர தேர்தலுக்கான உறுதிமொழி அல்ல. மாகாண சபைத் தேர்தல் விரைவில் இடம்பெறுமென்ற அதீத நம்பிக்கையில் அதனை நோக்கி வேகமாகப் பயணத்தை ஆரம்பித்த தமிழ்த் தேசிய கட்சிகள் எனப்படுபவர்கள் இப்போது ஏனோ ஒரு சோர்வு நிலையில் காணப்படுவதுபோல் தெரிகிறது. தேர்தலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் பொலிஸ் நிலையத்தில் தீ விபத்து..!

  • Mar 17, 2026 - 09:38 AM
  • 0 Comments

கோப்பாய் பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பொலிஸ் நிலைய பெயர் பலகை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. அத்துடன் வழக்கொன்றின் சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த படகொன்றும் தீயில் எரிந்துள்ளது. பொலிஸ் நிலைய வளாகத்தில் காணப்பட்ட குப்பைகளை நேற்று (16.03.2026) மாலை வேளை பொலிஸார் எரித்த வேளை அந்த தீ பரவி பெயர் பலகை , படகு மற்றும் அருகில் நின்ற மா மரம் என்வற்றில் பற்றி எரிந்தது. அதனை அடுத்து பொலிஸார் தீயை […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

யாழில் அண்ணன், தங்கை விபத்தில் ; நடு வீதியில் பிரிந்த உயிர்கள்..!

  • Mar 17, 2026 - 09:37 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்டிய பகுதியில் நேற்று மாலை (16.03.2026) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞன் மற்றும் அவரது சகோதரியான 19 வயது யுவதி ஆகியோரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

  • Mar 17, 2026 - 09:34 AM
  • 0 Comments

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்ததன் பின்னணியிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ‘அத தெரண’விடம் மேலும் தெரிவித்தார். தற்போது எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி நாட்டின் பொருளாதாரச் செயல்முறை மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கான திட்டங்கள் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கைையில் இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

  • Mar 17, 2026 - 09:33 AM
  • 0 Comments

மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் […]

உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

360 பவுண் தங்க ஆபரணங்கள்- மாட்டிய மன்னார் பெண்..!

  • Mar 17, 2026 - 09:32 AM
  • 0 Comments

மன்னாரில் பணச் சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் பெண் ஒருவர் நேற்று (15.03.2026) அன்று கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட சட்டவிரோத சொத்துக்களை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில், 66 வயதுடைய பெண் ஒருவரை சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரை தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு எதிராகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த நபர் கடத்தல் […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

17,000 மெட்ரிக் தொன் பெட்ரோலுடன் இலங்கையை வந்தடைந்த கப்பல்..!

  • Mar 17, 2026 - 09:30 AM
  • 0 Comments

இலங்கைக்கு ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதனை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்தார். இந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் டன் சூப்பர் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வந்தது என்பதை நிர்வாக பணிப்பாளர் உறுதிப்படுத்தினார். தற்போது கொள்முதல் கட்டளை (ஒர்டர்) செய்யப்பட்ட அனைத்து கப்பல்களும் திட்டமிட்டபடி வந்து சேர்வதாகவும், நாடு முழுவதும் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது..!

  • Mar 16, 2026 - 11:30 AM
  • 0 Comments

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக எடையுள்ள குஷ் ரக போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தாய்லாந்தின் பேங்கொக் நகரில் இருந்து நாட்டிற்கு வந்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோ 632 கிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. போதைப்பொருளுக்கு மேலதிகமாக, […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

வடமாகாாத்தில் வீதிகளை துரித கதியில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை..!

  • Mar 16, 2026 - 11:28 AM
  • 0 Comments

வட மாகாணத்திலுள்ள வீதிகள் அனைத்தையும் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் புனரமைக்க எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார். வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், மறுமலர்ச்சிக்கான பாதையாக யாழ். மாவட்டத்தில் 117.04 மில்லியன் ரூபாய் செலவில் காரைநகர் சுற்றுவட்ட வீதியின் புனரமைப்புப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று (15.03.2026) நடைபெற்றது. இந்நிழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய சுமார் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp