உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தொடர்பில் பொலிஸார் விளக்கம்..!

  • Mar 23, 2026 - 10:29 AM
  • 0 Comments

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதைப் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் ஒரு பதிவு தொடர்பாக, பொலிஸ் ஊடகப் பிரிவு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. “நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடி காலத்தில் நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சில முக்கிய விடயங்கள் குறித்து உங்கள் அவதானத்தைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” எனப் பொதுமக்களுக்கு வழிகாட்டுவது போல் அமைந்துள்ள அந்தச் செய்தி, எவ்வகையிலும் இலங்கை பொலிஸாரால் வெளியிடப்பட்டது அல்ல என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸார் தரப்பிலிருந்து […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சுகாதாரப் பிரிவினரின் விசேட அறிவுறுத்தல்..!

  • Mar 23, 2026 - 10:16 AM
  • 0 Comments

தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலை காரணமாக, பிள்ளைகளை நீரிழப்பில் இருந்து பாதுகாப்பதில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இதற்காக பிள்ளைகளுக்கு அதிகளவு நீர் மற்றும் இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறு கொழும்பு ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். பிள்ளைகளுக்கு அதிக தூக்கம், உணவில் விருப்பமின்மை, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மேலதிகமாக நீர் மற்றும் திரவ உணவுகளை வழங்குமாறு […]

பதிவு தரிசனம் உள்ளூர் புதியவை

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது..!

  • Mar 23, 2026 - 10:07 AM
  • 0 Comments

தெட்ஷணகைலாசம் எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்ஸவத் திருவிழா நேற்றைய தினம் (22.03.2026) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது. ​கொடியேற்றம் (துவஜாரோகணம்) (22.03.2026) காலை 8.00 மணிக்கு அம்பாளின் திருவருளுடன் இடம்பெற்றது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் பல்வேறு வாகனங்களில் அம்பாள் வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள் பாலிப்பார். ​இரதோற்சவம் (தேர்த்திருவிழா) 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணிக்கு இடம்பெறும். ​ 01.04.2026 அன்று உதயத்தில் தீர்த்தோற்ஸவமும், அன்று […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத பொருட்களுடன் ஐவர் கைது..!

  • Mar 23, 2026 - 09:57 AM
  • 0 Comments

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள், மருந்துகள் மற்றும் வாசனைத் திரவியங்களுடன் 5 பயணிகள் இன்று (23.03.2026) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா..!

  • Mar 23, 2026 - 09:51 AM
  • 0 Comments

சாவகச்சேரி வாரிவனம் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா எதிர்வரும் 01.04.2026 புதன்கிழமை காலை 9.30மணி தொடக்கம் 11.46மணி வரையான சுபவேளையில் இடம்பெற்று தொடர்ந்து 45நாட்கள் மண்டலாபிஷேக பெருவிழாவும் இடம்பெறவுள்ளது. கும்பாபிஷேக பெருவிழாவினை முன்னிட்ட கிரியாரம்ப நிகழ்வு 28/03 சனிக்கிழமை காலை 5மணி முதல் இடம்பெற்று 31.03.2026 செவ்வாய்க்கிழமை காலை 8மணி முதல் மாலை 5மணி வரை எண்ணெய் காப்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது. மேற்படி கும்பாபிஷேக பெருவிழா சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்,சிவஸ்ரீ செ.பரமானந்தக்குருக்கள் ஆகியோரின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் இன்று..!

  • Mar 23, 2026 - 09:45 AM
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப, பேருந்து கட்டணங்களை உயர்த்துவது தொடர்பான யோசனை இன்று (23.03.2026) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இலங்கை வெள்ளை டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்த சூத்திரத்தின்படி தற்போதைய கட்டணத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, புதிய கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி கோரி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருண்டா குறிப்பிட்டார். எவ்வாறாயினும், பேருந்து […]

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

இலங்கையில் இன்றைய வானிலை..!

  • Mar 23, 2026 - 09:33 AM
  • 0 Comments

23.03.2026 மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை..!

  • Mar 20, 2026 - 01:41 PM
  • 0 Comments

இலங்கை வாழ். முஸ்லிம்கள் நாளை (21.03.2026) நோன்புப் பெருநாளை கொண்டாடவுள்ள நிலையில், இன்று (20.03.2026) காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள் விளையாட்டு

மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி..

  • Mar 20, 2026 - 01:00 PM
  • 0 Comments

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வலுனர் திறனாய்வு போட்டி நேற்று (19.03.2026) பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. பாடசாலை அதிபர் ச.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக துணுக்காய் கல்வி லலய உடற்கல்வி பிரதிக்கல்விப் பணிப்பாளர் T.புஸ்பரட்னம் கலந்துகெண்டார். இந்நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் பதில் அதிபரும் யாழ். ஹட்லிக் கல்லூரி ஆசிரியருமாகிய சி.நிமலன், பாடசாலையின் முன்னாள் ஆசிரியரும் வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரி ஆசிரியருமாகிய ச.ஜெயலலிதா, பாடசாலையின் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

திடீர் மினி சூறாவளியால் நயினாதீவில் தூக்கி வீசப்பட்ட கொட்டகைகள்..!

  • Mar 20, 2026 - 12:36 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இன்று (20.03.2026) காலை மழை பெய்திருந்தது. இந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதனால், தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டுள்ளது. அதேவேளை, நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்கு துறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற் கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.  

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp