உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் மாணவர்களுக்கான இரு நாள் உளநல மேம்பாட்டு செயலமர்வு..!

batticaloa student workshop | Pathivu News

ரோட்டரி கழகத்தின் உலகளாவிய கொள்கையான “தன்னலமற்ற சேவை” என்பதற்கிணங்க, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் வலுவூட்டல் மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்காகக் கொண்டு, Rotary Club of Batticaloa Heritage அமைப்பினால் மாணவர்களுக்கான விசேட உளநல மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டமொன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

“மாணவர்களை உளவளத்தின் மூலம் வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான இந்த இரு நாள் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிப் பட்டறை, கடந்த 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் களுவங்கேணி விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் உணர்ச்சி நிலைத்தன்மை (Emotional Stability), தன்னம்பிக்கை மற்றும் நேர்மறை மனநலத்தை (Positive Mental Health) மேம்படுத்துவதை முதன்மையாகக் கொண்டு இவ் அமர்வுகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

வெறும் விரிவுரைகளாக மாத்திரம் இந்த செயலமர்வு அமையாமல், மாணவர்களைக் கவரும் வகையிலான குழுச் செயற்பாடுகள், கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு அமர்வுகள் இதில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கல்வியாளர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் (Mental Health Professionals) பலரால் இந்த அமர்வுகள் மிகவும் காத்திரமான முறையில் வழிநடத்தப்பட்டன.

இதனைத்தொடர்ந்து குறித்த செயலமர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கல்வி, சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கி வரும் Rotary Club of Batticaloa Heritage, இத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்ட மாணவர் சமூகத்தின் எதிர்கால முன்னேற்றத்திற்கான தங்களின் அர்ப்பணிப்பை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நிருபர்

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp