உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மகிந்தவின் 2வது புத்தா பொலிஸ் நிலையத்pல் ஆஜர்

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21-03) இரவு ஏற்பட்ட மோதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோசிதவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்று ஆஜராகியுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21-03) இரவு யோசித ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.

இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலின் போது யோசிதவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த மோதல் சம்பவம் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக யோஸித ராஜபக்ஸவும் அவரது மனைவியும் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் இன்றைய தினம் ஆஜராகியுள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp