உலகம்

அமெரிக்காவில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் உத்தரவில் ஜனாதிபதி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் மத்திய கல்வித்துறையை கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

இது அமெரிக்க வலதுசாரிகளின் பல்லாண்டு கால இலக்காக இருந்து வந்தது.
இந்த உத்தரவின் மூலம் கல்வித்துறை அதிகாரம் முழுவதும் மாகாணங்களுக்கு வழங்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் உள்ள கிழக்கு அறையில் அமைக்கப்பட்ட மேசைகளில் சுற்றி அமரவைக்கப்பட்டு இருந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் டொனால்டு டிரம்ப் மத்திய கல்வித்துறையை கலைக்கக் கோரிய உத்தரவில் கையெழுத்திட்டார்.

பிறகு தான் கையெழுத்திட்ட ஆவணங்களை உயர்த்திப் பிடித்தப்படி சிரித்தார்.
‘இந்த உத்தரவு, கல்வித்துறையை நிரந்தரமாக நீக்கத் தொடங்கும்.
நாங்கள் அதை மூடப் போகிறோம்.

விரைவில் இந்த நடவடிக்கை தொடங்கும்.

இது எங்களுக்கு எந்த பயனையும் அளிக்காது.

நாங்கள் கல்வித்துறையை மாகாணங்களிடமே ஒப்படைக்கப் போகிறோம்,’ என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

1979ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மத்திய கல்வித் துறையை, காங்கிரஸ் ஒப்புதல் இல்லாமல் மூட முடியாது.

ஆனால் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு கல்வித்துறையில் நிதி மற்றும் ஊழியர்களைப் பற்றாக்குறையை வைத்திருக்கும் அதிகாரம் கொண்டிருக்கும்.

இந்த உத்தரவு, கல்வித் துறை செயலாளர் லிண்டா மெக்மஹோனை, ‘மத்திய கல்வித் துறையை மூடுவதற்கும், கல்வி அதிகாரத்தை மாகாணங்களிடம் திருப்பி வழங்குவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க’ வலியுறுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp