உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பு மனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இன்று முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20-03-2025) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது.
தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி அதிகார சபைகள் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தேசித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ‘ சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனு பத்திரத்தில் ஒரு பிரதியை மாத்திரம் அத்துடன் இணைக்கப்பட வேண்டிய அனைத்து இணைப்புக்களுடன் உரிய காலப்பகுதியினுள் உரிய மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தல் வேண்டும்.

இளம் வேட்பாண்மையை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக மாவட்டப் பதிவாளரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டுமென்பதுடன், அவ்வாறில்லையேல் சமாதான அல்லது சத்திய ஆணையாளர் ஒருவரால் அத்தாட்சிப்படுத்தி வயதை உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசியொன்றினை வேட்புமனுப்பத்திரத்தில் இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்’ என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் வைப்பிலிடல் மற்றும் வேட்புமனுக்களை கையளித்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதற்கமைய கடந்த 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் கட்டுப்பணத்தை வைப்பிட்டன.
கட்டுப்பணம் வைப்பிலிடலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நாளை மறுதினம் புதன்கிழமையுடன் (19-03-2025) நிறைவடைகிறது.

இன்று முதல் புதன்கிழமை (19-03-2025), மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை (20-03-2025) நண்பகல் வரை வேட்புமனுக்களை சமர்ப்பித்தல் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறும்.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் திங்கட்கிழமை (17) நள்ளிரவுடன் நிறைவடையும்.
ஆகவே சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பங்களை கையளிப்பதற்கு இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது.

அத்துடன் கிளிநொச்சி பூநகரி பிரதேச சபை மன்னார் பிரதேச சபை மற்றும் அம்பாறை தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தல் கடந்த 10 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி (புதன்கிழமை) நிறைவடையும்.
இந்த பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 2025.03.24 முதல் 2025.03.27 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp