உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மனித எலும்புகள் மீட்டததையடுத்து மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை பாதுகாப்பில் ஈடுபடுத்த நீதிமன்றம் உத்தரவு

மனித எலும்புகள் மீட்டததையடுத்து மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் உள்ள சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு காவல்துறைப் பாதுகாப்புக்கு மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பிலும், முறைப்பாட்டாளர் சார்பிலும் சட்டத்தரணிகளும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு காவல்துறை பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் காவல்துறைப் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகளால் கோரப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான் மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கினார். வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp