தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளாhர்
தற்போது அவர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளாhர்