உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டம் தொழில்பாட்டு காலத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானம்

கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் கால வரையறையை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கருத்திட்டக் கண்காணிப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணல் மற்றும் பயன்பாட்டு சேவைகள் ஒருங்கிணைப்புக்காக இலங்கை அரசாங்கம் மற்றும் சீ.எச்.ஈ.சீ. துறைமுக நகர நிறுவனத்தை இணைப்புச் செய்வதற்கான பிரதான அலகாக, கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகு இயங்கி வருகின்றது.

இக்கருத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ள பணிகள் 2027 ஜூன் மாதமளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
அதனால், கொழும்புத் துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கருத்திட்ட முகாமைத்துவ அலகின் தொழிற்பாட்டுக் காலத்தை 2027.06.05 வரை நீடிப்பதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp