உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் , நெடுந்தீவு பகுதியில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

நெடுந்தீவு பகுதியை சேர்ந்த நவரத்தினம் ஐங்கரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நெடுந்தீவு மேற்கில் இருந்து உழவு இயந்திரத்தில் பயணித்த போது , பிரதேச வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள மதகுக்கு அருகில் உழவு இயந்திரம் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளது.

அதில் காயமடைந்த இளைஞனை மீட்டு நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp