உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழிலிருந்து மாடுகள் கடத்த வடிவமைக்கப்பட்ட பாரவூர்தியுடன் ஒருவர்

யாழ்ப்பாணத்தில் இருந்து மாடுகளை கடத்தி சென்றவரை சாவகச்சேரி காவல்துறையினர் நேற்று (24-02-2025) இரவு கைது செய்துள்ளதுடன் , கடத்தி செல்லப்பட்ட 18 மாடுகளை உயிருடன் மீட்டுள்ளதுடன் , கடத்தலுக்கு பயன்படுத்திய பரவூர்தியையும் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அனுமதியின்றி சட்டவிரோதமாக மாடுகள் கடத்தி செல்லப்படுவதாக சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வீதியில் பயணித்த பாரவூர்தியை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதன் போது , பாரவூர்திக்குள் 18 மாடுகள் , மிக நெருக்கமாக அடைக்கப்பட்டு இருந்தன.
குறித்த பாரவூர்தி மாடுகளை கடத்தி செல்லும் போது , காற்று வருவதற்காக மேல் பகுதிகளில் சில பகுதிகள் விலக்கப்பட்டு இருந்ததுடன் , உள்ளே மாடுகளை கட்டி வைப்பதற்காக கம்பிகள் பொருத்தப்பட்டும், மாடு கடத்தல்களுக்காக என பிரத்தியேகமாக பாரவூர்தி வடிவமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் சாவகச்சேரி காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp