செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் செல்ல பாதுகாப்பு தாருங்கள் அர்ச்சுனா எம்பி பாராளுமன்றத்தில் உருக்கமாக வேண்டுகோள்

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் காலப்பகுதியிலாவது தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

கொழும்பு நீதிமன்றத்தில் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளேன்.
நான் பாராளுமன்ற அமர்வு முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்.

அதனால் பாராளுமன்ற அமர்வு காலத்திலாவது எனக்கு பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொலிஸ் அமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இது முக்கியமான விடயமாக உள்ளது என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர், இந்த விடயத்தை சபாநாயகருக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp